காக்கா முட்டை சிறுவர்களுடன் இணைந்த நயன்தாரா!

Bookmark and Share

காக்கா முட்டை சிறுவர்களுடன் இணைந்த நயன்தாரா!

கடந்த 2014-ஆண்டு தனுஷ் தயாரிப்பில் வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘காக்கா முட்டை’. சேரி பகுதியில் வாழும் இரண்டு சிறுவர்கள், உயர்ந்த வர்க்கத்தினரால் சாப்பிடப்படும் உணவான பீட்சாவை சாப்பிட எடுக்கும் முயற்சிகளை கதையாக கொண்டு இயக்கியிருந்தார் மணிகண்டன்.

இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்தது. இப்படத்தில் நடித்த சிறுவர்களான விக்னேஷ், ரமேஷ் இருவருக்கும் பாராட்டுகள் பல கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து இந்த சிறுவர்கள் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

இப்படத்தை மீஞ்சூர் கோபி என்பவர் இயக்கி வருகிறார். இவர்தான் விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் கதை தன்னுடையது என்று அந்த படத்திற்கு மிகப்பெரிய பிரச்சினையை கொடுத்தவர். தற்போது ‘காக்கா முட்டை’  சிறுவர்களை வைத்து இயக்கி வரும் இப்படத்தில் நடிகை நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

இப்படத்தில் நயன்தாரா கலெக்டர் வேடத்தில் நடிக்கிறாராம். தண்ணீர் பிரச்சினையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இதில் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் எடுத்து முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சுனு லட்சுமி, ராமச்சந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். 

இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். லால்குடி இளையராஜா அரங்கு அமைக்கும் பணிகளை செய்துவருகிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இப்படத்தில் பாடல்களே கிடையாதாம். இருப்பினும், பின்னணி இசைக்காக முன்னணி இசையமைப்பாளர் ஒருவரை நியமிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 


Post your comment





Related News
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions