அதிமுகவில் இணைந்தாரா நயன்தாரா?

Bookmark and Share

அதிமுகவில் இணைந்தாரா நயன்தாரா?

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நாயகியான நயன்தாரா, விரைவில் அரசியலில் குதிக்கவுள்ளதாகவும், அவர் அதிமுகவை நோக்கி செல்வதாகவும் ஒருசில ஊடகங்கள் வதந்தியை சிலமணி நேரங்களாக பரப்பி வருகின்றன.

இதற்கு காரணம் நேற்று சென்னையில் நடந்த 'அம்மா ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன்' நடத்திய விழா ஒன்றில் அவர் கலந்து கொண்டதுதான் நேற்று மெட்ராஸ் பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்ற 'அம்மா ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன்' நடத்திய விழாவில் கலந்து கொண்ட நயன்தாரா விளையாட்டு வீரர்களுக்கு தனது ஃபேவரைட் புன்னகையுடன் விருதுகளை கொடுத்தார்.

இந்த விழாவில் விஸ்வநாதன் ஆனந்த், பி.டி.உஷா, வாசுதேவ் பாஸ்கரன், ஸ்ரீகாந்த் உள்பட பல விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். அம்மா ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன்' விழாவில் கலந்து கொண்டதற்காக அம்மாவின் கட்சியில் சேரவுள்ளதாக ஒருசில ஊடகங்கள் வதந்தியை கிளப்பி விட்டுள்ளதாகவும், உண்மையில் அவருக்கு அரசியலில் சிறிதும் ஆர்வம் இல்லை என்றும்  தென்னிந்திய மொழிகளில் இன்னும் அவர் பிசியாக இருப்பதால் அவர் நடிப்பை தவிர வேறு எந்த துறையிலும் கால்பதிக்க வாய்ப்பில்லை என்றே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions