சம மரியாதை தரும் நயன்தாரா : வியக்கும் ஆரி!

Bookmark and Share

சம மரியாதை தரும் நயன்தாரா : வியக்கும் ஆரி!

நடிகர் ஆரி நடித்த முதல்படம் ஆடும் கூத்து தேசிய விருது பெற்றது. அது ஒரு விருதுப்படம். வணிக சினிமாவில் ஆரி அறிமுகமான முதல்படம் ரெட்ட சுழி ,இது பாலசந்தர், பாரதிராஜாவுடன் இணைந்து நடித்த படம். பிறகு நெடுஞ்சாலை, மாலைப் பொழுதின் மயக்கத்திலே என்று நடித்தார். நெடுஞ்சாலையில் கிடைத்த பெயர் நல்ல மைலேஜ் கொடுத்தது. அண்மையில் வந்த தரணி ஆரிக்கு நல்ல நடிகர் என்கிற சான்றிதழைத் தேடித் தந்தது. இருந்தாலும் கவர்ச்சிகரமான பெயர் இதுவரை வரவில்லை. இப்போது வந்து விட்டது. மாயா படத்தில் நயன்தாராவுடன் நடிக்கிறார் இது போதாதா?

மாயா படத்தை இயக்கியுள்ள அஸ்வின் சரவணன் யாரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாதவர். படப்பிடிப்பு சென்னை தாண்டி புறநகர் பகுதிகளில் நடந்துள்ளது. 45 நாளில் படத்தை முடித்துள்ளார்கள். 

இது ஒரு பேய்ப்படமா என்றால் இது ஒரு சூப்பர் நேச்சரல் படம் என்கிறார்கள். நயன்தாரா பற்றி ஆரி புகழ்ந்து தள்ளுகிறார். அவர் காலையில் படப்பிடிப்புக்கு வந்ததும் தான் பெரிய நடிகை என்பதை எல்லாம் மறந்து முதலில் தேடிவந்து அனைவருக்கும் குட்மார்னிங் சொல்வார். தலைக்கனம் இல்லாதவர். பெரிய, சிறிய ஆள் என்று பார்க்காமல் சம மரியாதை தருபவர்." என்கிறார்.

நயன்தாரா படத்தில் வந்து விட்டதால் இனி நடிகர் ஆரியும் கூட பேசப்படுவார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions