மாயா என்கிற பேய் வேடத்தில் நடிக்கிறாரா நயன்தாரா!

Bookmark and Share

மாயா என்கிற பேய் வேடத்தில் நடிக்கிறாரா நயன்தாரா!

ரெட்டை சுழி, மாலைப்பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை ஆகிய படங்களில் நடித்தவர் ஆரி. தற்போது சில படங்களில் நடித்து வந்தபோதும் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள மாயா படத்தை பெரிதாக எதிர்பார்க்கிறார்.

இந்த மாயா படத்தின் கதை முழுக்க முழுக்க நயன்தாராவை சுற்றியே அமைக்கப்பட்டுள்ளது என்றபோதும், ஆரிக்கு பர்பார்மென்ஸ் பண்ணுவதற்கு நிறைய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாம்.

குறிப்பாக, இதற்கு முந்தைய படங்களில் காதல் மற்றும் சீரியசான பர்பார்மென்ஸ் கொடுத்து வந்த ஆரி, இந்த படத்தில் முதன்முறையாக காமெடி ஏரியாவிற்குள்ளும் இறங்கியிருக்கிறாராம்.

இந்த திகில் படத்தில் ஓவியராக நடித்திருக்கும் ஆரியுடன் கருணாஸ் படம் முழுக்க நடித்திருப்பதால் காமெடியில் அவரும் இவருக்கு பெரிதாக கைகொடுத்திருக்கிறாராம். மேலும், மாயா திகில் படம் என்றபோதும், காஞ்சனா, டார்லிங் படங்கள் வரிசையில், காமெடி கலந்த திகில் படமாக வந்திருக்கிறதாம்.  

இதில் நயன்தாரா மாயா என்கிற பேய் வேடத்தில் நடித்திருக்கிறாரா? என்று அப்பட வட்டாரத்தை விசாரித்தால், எந்த பதிலும் சொல்லாமல் திகில் படம் அவ்வளவுதான் என்று மட்டும் சொல்லி விட்டு எஸ்கேப் ஆகிறார்கள்


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions