3 மொழிகளில் வெளிவருகிறது மாயா

Bookmark and Share

3 மொழிகளில் வெளிவருகிறது மாயா

நயன்தாரா, ஆரி நடிக்கும் படம் மாயா. இவர்களுடன், ரேஷ்மி மேனன், கோபி. அஜ்மல் நடிக்கிறார்கள். அஸ்வின் சரவணன் என்ற புதுமுகம் இயக்குகிறார். இதில் ஆரி ஓவியராக நடிக்கிறார் இதற்காக ஆர்ட் டைரக்டர் ராமலிங்கத்திடம் முறைப்படி ஓவியம் கற்றுக் கொண்டு நடித்திருக்கிறார்.

படத்தில் நயன்தாராவுக்கும், ஆரிக்கும் காமினேஷன் காட்சிகள் கிடையாது. ஆனாலும் இருவரையும் தொடர்புபடுத்தித்தான் கதை பயணிக்கும். வித்தியாசமான ஹாரர் படம். படப்பிடிப்புகள் முடிந்து விட்டது.

டப்பிங் மற்றும் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. படத்தில் வசனங்கள் மிகவும் குறைவு. காட்சி வழி சொல்லப்படும் கதையாம். ஒரே நாளில் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் வெளிவருகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions