அதிக படங்களை வைத்திருக்கும் 6 கதாநாயகிகள்

Bookmark and Share

அதிக படங்களை வைத்திருக்கும் 6 கதாநாயகிகள்

தமிழில் இந்த வருடம் 204 படங்கள் வெளி வந்துள்ளன. இதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட புதுமுக கதாநாயகிகள் அறிமுகமாகி இருக்கின்றனர். ஆனால் இவர்கள் ஓரிரு படங்களிலேயே ஓரங்கட்டப்பட்டுவிட்டார்கள். சிறுபட்ஜெட் படங்கள் ஓடாமல் நஷ்டம் அடைந்ததால் இந்த நடிகைகள் செல்வாக்கு இழந்துபோனார்கள்.

இவர்கள் மத்தியில் நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, சமந்தா, சுருதிஹாசன், எமிஜாக்சன் ஆகிய 6 பேர் மட்டும் முன்னணி கதாநாயகிகளாக வலம் வருகிறார்கள்.

பெரிய கதாநாயகர்கள் இந்த நடிகைகளுடன் ஜோடி சேரவே ஆர்வம் காட்டுகிறார்கள். ரூ.30 கோடி, ரூ.50 கோடி என பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படங்களுக்கு இவர்களே கதாநாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்படுகின்றனர்.

இதனால் இந்த 6 பேர் மத்தியில் பட வாய்ப்புகளை பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. நயன்தாரா நடிப்பில் இந்த வருடம் நண்பேன்டா, மாஸ், தனிஒருவன், மாயா, நானும் ரவுடிதான் ஆகிய 5 படங்கள் வெளிவந்தன. இவற்றில் தனிஒருவன் மெகா ஹிட் படமாக அமைந்தது.

மாயா, நானும் ரவுடிதான் படங்களும் வசூலில் சக்கைபோடு போட்டன. இதன் மூலம் தமிழில் முதல் இடத்தை அவர் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு இருக்கிறார். இது நம்ம ஆளு, திருநாள், காஸ்மோரா மற்றும் இரண்டு படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இவை அடுத்த வருடம் ஒவ்வொன்றாக திரைக்கு வர இருக்கிறது.

திரிஷா நடித்து இந்த வருடம் என்னை அறிந்தால், சகலகலா வல்லவன், தூங்காவனம், பூலோகம் படங்கள் வெளிவந்தன. தற்போது அரண்மனை-2, போகி, நாயகி படங்களில் நடிக்கிறார். தனுஷ் ஜோடியாக கொடி என்ற படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.

ஹன்சிகாவுக்கு இந்த வருடம் புலி, ரோமியோ ஜுலியட், ஆம்பள, வாலு, படங்கள் வந்தன. தொடர்ந்து அரண்மனை-2, உயிரே உயிரே படங்கள் வெளிவர இருக்கின்றன. மேலும் 3 படங்களிலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

சுருதிஹாசனுக்கு இந்த வருடம் ‘வேதாளம்’ ஹிட் படமாக அமைந்தது, ‘புலி’ படத்திலும் நடித்து இருந்தார். அடுத்து ‘சிங்கம்-3’ படத்தில் சூர்யா ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

எமிஜாக்சன் கவர்ச்சிக்கு தாராளம், முத்தக்காட்சிக்கு சம்மதம் என்று இருப்பதால் படங்கள் குவிகிறது. இவரது வளர்ச்சி சக நடிகைகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வருடத்தில் எமிஜாக்சன் நடித்து ஐ, தங்கமகன் படங்கள் வந்தன.

தற்போது இந்திய திரையுலக வரலாற்றில் அதிக செலவில் தயாராகும் எந்திரன் படத்தின் தொடர்ச்சியான ‘2.0’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். விஜய்யுடன் தெறி, உதயநிதியுடன் கெத்து என மேலும் 2 படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

சமந்தாவுக்கு இந்த வருடம் 10 எண்றதுக்குள்ள, தங்கமகன் ஆகிய 2 படங்கள் வெளி வந்தன. தொடர்ந்து 24, தெறி, வடசென்னை ஆகிய 3 படங்களில் நடிக்கிறார். அனுஷ்கா ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions