நயன்தாரா போலீஸா? இளம் இயக்குனர் பதில்!

Bookmark and Share

நயன்தாரா போலீஸா? இளம் இயக்குனர் பதில்!

2015-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ஹாரர் படம் டிமாண்டி காலணி. இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து. இவர் அடுத்ததாக அதர்வாவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இமைக்கா நொடிகள் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அதர்வா ஜோடியாக முதல்முறையாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக நேற்று தகவல் வெளியானது. ஆனால் இப்படத்தில் நயன்தாரா, அதர்வா ஜோடியாக நடிக்கவில்லை, மாறாக போலீஸ் அதிகாரியாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவிருப்பதாக பின்பு சொல்லப்பட்டது.

இந்நிலையில் தற்போது இதையும் இயக்குனர் அஜய் ஞானமுத்து மறுத்து பேசியுள்ளார். மேலும் நயன்தாராவின் ரோல் இப்படத்தில் சஸ்பென்ஸாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions