பிலிம்பேர் விருதில் நயன்தாராவை கண்டு கொள்ளாத தனுஷ்!

Bookmark and Share

பிலிம்பேர் விருதில் நயன்தாராவை கண்டு கொள்ளாத தனுஷ்!

சமீபத்தில் ஐதாராபாத்தில் நடந்த பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்ததற்காக நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. இதை நயன்தாரா நேரில் சென்று வாங்கினார்.

இந்த படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் இந்த விழாவில் பேசும் போது நயன்தாரா பற்றி குறிப்பிடவில்லை என்று கூறப்படுகிறது. அடுத்து மேடை ஏறி விருது வாங்கிய நயன்தாரா, ‘தனுஷ் என்னைப்பற்றி எதுவும் பேசவில்லை. ஒரு வேளை அவருக்கு என் நடிப்பு பிடிக்கவில்லையோ என்னவோ.... ஐயம் சாரி’ என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய நயன்தாரா, ‘இந்த விருதை இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு சமர்ப்பிக்கிறேன்’ என்று கூறினார்.

இது தவிர இந்த விருதுடன் விக்னேஷ் சிவனை சந்தித்த படத்தை தனது இணையதள பக்கத்தில் நயன்தாரா வெளியிட்டுள்ளார்.

நயன்தாரா தற்போது விக்னேஷ்சிவனை காதலித்து வருவதாகவும், சமீபகாலமாக இருவரும் பிரிந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் நயன்தாரா இந்த விழாவில் விக்னேஷ் சிவனை பாராட்டி இருப்பதும், தனது இணைய தள பக்கத்தில் இருவரும் விருதுடன் இருப்பதும் போன்ற படத்தை வெளியிட்டு இருப்பதும், இருவரும் நெருக்கமாகவே இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கிறது என்று கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசுகிறார்கள்.


Post your comment





Related News
தனுஷை அடுத்து தோழி நயன்தாராவுக்கும் புரமோஷன்
தனுஷ், நயன்தாரா இடையே சண்டை: இது சமந்தாவுக்கு ரொம்ப நல்லதாப் போச்சு
தூய்மையாக இருங்கள், உண்மையையே பாருங்கள் : நயன்தாரா
நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்தது மகிழ்ச்சி, தனுஷ் சாருக்கு நன்றி- விஜய்சேதுபதி!
விஜயசேதுபதியுடன் ஜோடி சேருகிறார் நயன்தாரா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions