ஒரே பாடலில் இரண்டு காதலர்களுக்கு பதிலடி கொடுத்த.. நயன்தாரா!

Bookmark and Share

ஒரே பாடலில் இரண்டு காதலர்களுக்கு பதிலடி கொடுத்த.. நயன்தாரா!

யாரடி நீ மோகினி படத்தில் ஜோடி சேர்ந்த தனுஷ்- நயன்தாரா ஜோடி அதன்பிறகு இணையவில்லை. ஆனால் அவர்களுக்கிடையே நல்லதொரு புரிதல் இருந்து வருகிறது.


அதனால்தான், குததுப்பாட்டுக்கே ஆடமாட்டேன் என்று நழுவிக்கொண்டு வந்த நயன்தாரா, தனுஷ் எதிர்நீச்சல் படத்தில் தன்னுடன் ஒரு பாட்டுக்கு ஆடவேண்டும் என்று சொன்னதும், ஏன் எதற்கு என்றுகூட கேட்காமல் நடித்துக்கொடுத்திருக்கிறார். அதிலும் சம்பளமே வாங்காததோடு, தனது சொந்த காஸ்டியூம் அணிந்தே ஆடியிருக்கிறார்.


ஆனால் இதற்கு இன்னொரு காரணமும் உள்ளதாம். அவர்கள் ஆடிய அந்த பாடல் காதல் தோல்வியை பிரதிபலிக்கும் பாடலாம். 'சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல, பத்து நாளா சரக்கு அடிச்சேன் போதையே இல்ல' என்று தொடங்கும் அந்த பாடலின் சூழலை இயக்குனர் சொன்னதும் நயன்தாராவுக்கு மிகவும் பிடித்துப்போனதாம்.

நயந்தாரவுக்கு  இந்த பாடல் பிடிப்பதற்கு  இரண்டு காரணங்கள்,

ஒன்று சிம்பு வானம் படத்தில் நயன்தாரவை மனதில் வைத்து பாடிய பாடல் 'எவன்டி உன்ன பெத்தான்' என்ற பாடலில் 'சத்தியமா நீ எனக்கு வேணும்' என்று  சிம்பு நயந்தாரவுக்கு நக்கலாக பாடப்பட்டதாக கூறப்பட்டது.  இதனால் தனுஷுடன் இணைந்து 'சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல' என சிம்புவுக்கு எதிராக  குத்தாட்டம் போட்டுள்ளார் நயன்.


அதே போல் தன்னை கழட்டிவிட்ட பிரபுதேவாவை மனதில் நினைத்துக்கொண்டே, சத்தியமா நீ எனக்கு தேவையே இல்லை -என்று ஆவேச குத்தாட்டம் போட்டாராம் நயன்தாரா.

எது எப்படியோ இரண்டுபேருக்கும் ஒரே பாடலில் குத்தாட்டம் போட்டு பதிலளித்துள்ளார் நயன்தாரா!


Post your comment

Related News
திலீப்பை திருமணம் செய்ததும் காவ்யா செய்த முதல் வேலை!
சௌந்தர்யாவை தொடர்ந்து இன்னொரு பெண் இயக்குனர் படத்தில் தனுஷ்!
டோராவின் பாடல்கள் டிஜிட்டல் தலத்தில் வெளியிடு!
ஜனவரியில் லண்டன் செல்லும் நயன்தாரா – காரணம் இதுதான்!
தனுஷின் தந்தை கிருஷ்ணமூர்த்திதான் – விசு ஆதாரத்துடன் பேட்டி!
தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்க இதுதான் காரணம் – உண்மையை சொன்ன ஐஸ்வர்யா தனுஷ்!
பார்ட்டியில் ஹன்சிகா போட்ட குத்தாட்டம் – வைரலாகும் வீடியோ!
தனுஷ் யாருடைய மகன் – ஆதாரம் உள்ளே!
விஜய்யிடம் நிறைய கருப்பு பணம் உள்ளது – கிளம்பிய சர்ச்சை!
தனுஷ் – கௌதம் பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் நேரம் அறிவிப்பு!

Latest Gallery


About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2016. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions