நயன்தாரா படத்துக்கு பர்ஸ்ட் லுக் ரெடி

Bookmark and Share

நயன்தாரா படத்துக்கு பர்ஸ்ட் லுக் ரெடி

காதல் தோல்விக்கு பிறகு தற்போது நயன்தாரா தற்போது சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரத் தொடங்கிவிட்டார். தற்போது இவர் கைவசம் ‘நானும் ரவுடிதான்’, ‘இது நம்ம ஆளு’, ‘தனி ஒருவன்’, ‘கஷ்மோரா’, ‘திருநாள்’ உள்ளிட்ட அரை டஜன் படங்கள் உள்ளன. 

ஒவ்வொரு படங்களுக்கும் சரியான நேரத்தில் கால்ஷீட் ஒதுக்கி, இயக்குனர்களின் நடிகையாக உருவெடுத்திருக்கும் இவர், ‘மாயா’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ‘நெடுஞ்சாலை’ படத்தின் நாயகன் ஆரி நடித்துள்ளார். 

முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் நிலையில், வளர்ந்து வரும் நடிகரான ஆரியுடன் நயன்தாரா இணைந்து நடித்திருப்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. 

இந்த படத்தை அஸ்வின் சரவணன் என்பவர் இயக்கியிருக்கிறார். திகில் நிறைந்த படமாக இது உருவாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற ஜூன் 12-ந் தேதி வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்திருக்கும் எஸ்.ஆர்.பிரபு இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.


Post your comment





Related News
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட "கருத்துகளை பதிவு செய்" படத்தின் First Title Look.
விஜய்யின் மெர்சல் போஸ்டரை செய்தது இவர் தான்!
'விஸ்வரூபம் 2' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது!
முறுக்கு மீசையுடன் விஜய் சுற்ற இதான் காரணமா?
ஹிருத்திக் ரோஷனின் முன்னாள் மனைவி மீது பணமோசடி புகார்!
போப்பாண்டவர் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்து - நடிகர் ரித்திக் ரோஷனுக்கு நோட்டீஸ்!
விஜய் பிறந்த நாளை முன்னிட்டு கத்தி பர்ஸ்ட் லுக் ரிலிஸ்..!
சர்ச்சையில் சிக்கிய கமலின் உத்தம வில்லன் போஸ்டர்..!
வேலையில்லா பட்டதாரியில் தனுஷ் பாடிய தொட்டு பாத்தா ஷாக்..!
ஜில்லா பஸ்ட் லுக் போஸ்டர்-மோகன்லால் ரசிகர்கள் அப்செட்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions