நயன்தாராவின் முன்னாள் காதலரான ஜே.டி.சக்கரவர்த்தியை தெரியுமா..?

Bookmark and Share

நயன்தாராவின் முன்னாள் காதலரான ஜே.டி.சக்கரவர்த்தியை தெரியுமா..?

ஒருகாலத்தில் சிவா, சத்யா, பூத் ரிட்டர்ன்ஸ் என ராம்கோபால் வர்மா இயக்கிய சில படங்களில் அவரது ஆஸ்தான வில்லனாக, கதாநாயகனாக நடித்துவந்தவர் தான் ஜே.டி.சக்கரவர்த்தி.

கடந்த வருடங்களில் வெளியான விஷாலின் சமர் மற்றும் விக்ரம்பிரபுவின் அரிமா நம்பியில் வில்லனாக கூட நடித்திருந்தாரே அவரேதான். இவர் நயன்தாராவின் முன்னாள் காதலர் என .அப்பட்டமாக பழி சுமத்துவோம் என்றுதானே நினைத்து ஏமாந்தீர்கள்..? தற்போது நயன்தாரா, மலையாளத்தில் சித்திக் இயக்கத்தில் பாஸ்கர் தி ராஸ்கல் என்கிற படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அல்லவா..? அந்தப்படத்தில் தான் நயன்தாராவின் முன்னாள் காதலனாக நடிக்கிறார் ஜே.டி.சக்கரவர்த்தி.

இன்னும் சொல்லப்போனால் மம்முட்டிக்கு வில்லன். மெகாஸ்டார் மம்முட்டி, நயன்தாராவுடன் நடிப்பது சக்கரவர்த்திக்கு ஒரு பக்கம் சந்தோசம் என்றால், இந்தப்படத்தில் அவரது கதாபாத்திரத்தை சித்திக் வடிவமைத்திருக்கும் விதம், அவருக்கு இன்னும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறதாம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions