நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்

Bookmark and Share

நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்

லக்‌ஷ்மி, மா உள்ளிட்ட குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா ஒரு புதிய படத்தில் தற்போது நடிக்க துவங்கியுள்ளார். மாயா , கோலமாவு கோகிலா, அறம் போன்ற படங்களில் சோலோ ஹீரோயினாக நடித்த அவரின் அடுத்த படம் இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக மெட்ராஸ் புகழ் கலையரசன் நடிக்கிறார் என தகவல் பரவி வருகிறது. இதுபற்றி படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

முந்தைய படங்களில் அவருக்கு ஜோடியாக யாரும் நடிக்காத நிலையில் தற்போது ஒரு வளர்ந்து வரும் ஹீரோவை ஜோடியாக போட்டிருப்பது ரசிகர்களுக்கு அச்சர்யமளித்துள்ளது. இது ஹாரர் படம் என்பதால் ஷூட்டிங்கிற்காக பேய் பங்களா செட் ஒன்றையும் படக்குழுவினர் சென்னையில் அமைத்து வருகின்றனர்.

 

 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions