லட்சுமி குறும்பட இயக்குனருடன் நயன்தாராவின் அடுத்த படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Bookmark and Share

லட்சுமி குறும்பட இயக்குனருடன் நயன்தாராவின் அடுத்த படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நயன்தாரா, தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக விளங்கி வருகிறார்.

இவரது நடிப்பில் இறுதியாக அறம் படம் வெளியாகி ரசிகர்களிடம் மிக சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து லட்சுமி, மா போன்ற குறும்படங்களை இயக்கி இருந்த சர்ஜுன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தங்களுடைய மூன்றாவது படமாக தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions