மாஸ் முதல் முன்னோட்டம்

Bookmark and Share

மாஸ் முதல் முன்னோட்டம்

சூர்யாவின் சிங்கப் பாய்ச்சலுக்கு ஸ்பீட் பிரேக் போட்டது அஞ்சான். அதன் பிறகு மாஸாக எழுந்து வரவேண்டிய கட்டாயம் சூர்யாவுக்கு. அதானல்தான் கொஞ்சம் மெதுவாக கதை சொல்லும் கவுதம் வாசுதேவ் மேனனை கழற்றிவிட்டுவிட்டு மாஸாக கதை சொல்லும் வெங்கட்பிரபுவிடம் வந்து சேர்ந்தார்.

ஸ்டூடியே கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பு, யுவன் இசை, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு என பிரமாண்டங்கள் ஒன்றிணைந்தது. சூர்யாவின் 2டி நிறுவனம் இணை தயாரிப்பு, ஈராஸ் நிறுவனத்தின் வெளியீடு என மாஸ் மாஸான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாஸ் பற்றிய சில துளிகள்...

ஏமாற்றி பிழைப்பனுக்கும், அதை தடுக்க நினைப்பவனுக்குமான மோதல்தான் மாஸ். இதில் யார் யாரை வெல்கிறார்கள், ஏமாற்றுவது யார்? தடுப்பது யார்? என்பதெல்லாம் சஸ்பென்ஸ்.

அஜீத்துக்கு தல, விஜய்க்கு தளபதி என்கிற அடைமொழி இருப்பது போல இனி சூர்யாவுக்கு மாஸ் என்கிற அடைமொழி வந்து சேர்கிற அளவுக்கு பவர்புல்லான கேரக்டர்.

வெங்கட் பிரபு படங்களில் ஜாலி இருக்கும் கதையும், மெசேஜும் இருக்காது. இதில் அந்த இரண்டும் உண்டு. நயன்தரா வெறும் கமர்ஷியல் பட ஹீரோயின் இல்லை.

அவருக்கு கதையில் முக்கியமான கேரக்டர் இருக்கு. இதுவரை பார்க்காத வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார். படத்துக்கு பின்னணி இசை அமைப்பது யுவன் ஷங்கர் ராஜா.

மொத்தம் 5 பாடல்கள். ஒரு பாடலுக்கு தமன் இசை கோர்ப்பு செய்திருக்கிறார்.சமுத்திரகனி பவர்புல் வில்லனாக நடித்திருக்கிறார். பார்த்திபன் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.

படம் முழுக்க சூர்யாவுடன் வருகிறார் பிரேம்ஜி. வெறும் காமெடியனாக மட்டும் இல்லாமல் வித்தியாசமான குணசித்திர கேரக்டரிலும் நடித்திருக்கிறார்.

படத்தில் இடம்பெறும் பைக் சேசிங் பேசப்படுவதாக இருக்கும். இதற்காக ஸ்பெஷல் பயிற்சி எடுத்து பைக் ரைடிங் செய்திருக்கிறார் சூர்யா.

படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கிறது. தற்போது அந்த பணிகள் சென்னை மற்றும் மும்பையில் நடந்து வருகிறது. ஏப்ரல் மாதம் சம்மர் விடுமுறை விருந்தாக வருகிறது மாஸ்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions