மாயா இரண்டாம் பாகம் உருவாகிறதா?

Bookmark and Share

மாயா இரண்டாம் பாகம் உருவாகிறதா?

அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, ஆரி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘மாயா’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

இதைதொடர்ந்து இயக்குனர் அஸ்வின் சரவணன் அடுத்ததாக அறிமுக தயாரிப்பாளர் ஹரி கிருஷ்ணனுக்காக ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இது மாயா படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்பட்டு வந்தது. ஆனால் இயக்குனர் அஸ்வின் சரவணன் தற்போது இத்தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் மாயா படத்துக்கும் இந்த படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions