நயன்தாரா சொதப்பல்...! நலனுக்கு லாபம்....!

Bookmark and Share

நயன்தாரா சொதப்பல்...! நலனுக்கு லாபம்....!

குறும்பட இயக்குநரான நலன் குமாரசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்து சுமார் 2 வருடங்களுக்கு முன் வெளிவந்த படம் - 'சூது கவ்வும்'. இப்படத்தை திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை வாங்கியதோடு சில கோடிகள் செலவு செய்து பெரிய அளவில் விளம்பரம் செய்து தமிழகமெங்கும் வெளியிட்டது. விளம்பர வெளிச்சம் பட்டதால் சூது கவ்வும் படம் வெற்றி வாகை சூடியது.

இதே கூட்டணி இப்போது மீண்டும் கை கோர்க்கிறது. யெஸ்... தங்களின் அடுத்த படத்திற்கும் தயாராகிவிட்டது. எஸ்கிமோ காதல் என்று தலைப்பு சூட்டப்பட்டதாக சொல்லப்பட்டது.

உண்மையில் இப்படத்துக்கு  இன்னும் பெயரிடப்படவில்லை. இப்படத்தை திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.  

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மடோனா கதாநாயகியாக நடிக்கின்றார். சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் மேலும் பல நட்சத்திரங்கள்  இப்படத்தில்  நடிக்கின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, லியோ ஜான்பால் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.நேற்று முதல் இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நகரின் முக்கிய இடங்களில் நடைபெற உள்ளது.

தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்து வந்தார். நயன்தாரா கால்ஷீட் சொதப்பியதால் நானும் ரௌடிதான் படப்பிடிப்பு பாதிக்கப்பட, அதற்கு ஒதுக்கிய கால்ஷீட்டை நலன் குமாராசாமிக்கு ஒதுக்கிவிட்டாராம் விஜய்சேதுபதி.


Post your comment





Related News
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!
காதல் மட்டுமில்லை கல்யாணமும் கடந்து போகும்- நலன் குமாரசாமி
இயக்குநர் நலன் குமாரசாமிக்கு திருமணம்: விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி நேரில் வாழ்த்து
வல்லதேசம் இசையமைப்பாளரின் இசை ஆல்பத்தை வெளியிடும் கலைப்புலி எஸ்.தாணு
சிபிராஜ் படத்தில் நடிக்கும் நலன் குமாரசாமி!
நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்கும் வடிவேலு?
தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நலன் குமாரசாமி
நலன்குமாரசாமியின் எஸ்கிமோ காதல்
தொடங்கியது தமிழின் முதல் சயின்ஸ் ஃபிக்ஷன் ரொமான்டிக் காமெடிப் படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions