பாவனாவை போல் பொது இடங்களிலும் பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளான நாயகிகள்

Bookmark and Share

பாவனாவை போல் பொது இடங்களிலும் பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளான நாயகிகள்

தமிழ், மலையாளம் என வெற்றிநடைபோட்ட நாயகி பாவனா. இவருக்கு அண்மையில் நடந்த கொடூர செயலுக்கு பலரும் தங்களது கோபத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பாவனாவை போல் பொது இடங்களில் பாதிக்கப்பட்ட நாயகிகளை பற்றி பார்ப்போம்.

ஹன்சிகா

கோயம்புத்தூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ஹன்சிகாவிடம் அவரது ரசிகர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

பிரியாமணி

CCL நிகழ்ச்சி விருந்து விழாவில் நன்கு குடித்திருந்த ஒரு பிரபலம், பிரியாமணியை நெருங்கி இருக்க முயற்சி செய்திருக்கிறார்.

ஸ்வேதா மேனன்

எம்.பி பீதாம்பரா குரூப் என்பவரால் பொது நிகழ்ச்சியில் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார். இதுகுறித்து போலீஸில் புகார் அளித்த ஸ்வேதா எம்.பி மன்னிப்பு கேட்டதும் புகாரை திரும்ப பெற்றிருக்கிறார்.

நக்மா

அரசியல் பிரச்சாரத்தின் போது எம்.எல்.ஏ கஜ்ராஜ் ஷர்மா என்பவர் நக்மாவை கட்டி அனைத்து முத்தம் கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கிறார்.

நயன்தாரா

சென்னையில் நடந்த ஒரு பள்ளி நிகழ்ச்சியில் அவரின் ரசிகர்கள் சிலர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். அதிலும் அங்கு ஏராளமான போலீஸ் அதிகாரிகள் இருந்திருக்கின்றனர்.

ஸ்ரேயா சரண்


2008ம் ஆண்டு ஸ்ரேயா திருப்பதி கோவிலில் பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளாகியுள்ளார். அந்த நபரையும் அங்கேயே அடித்துள்ளார்.

தமன்னா

தெலுங்கானா போராட்டக்காரர்களால் விசாக பட்டினத்தில் பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளாகியுள்ளார்.

ஜோதிகா


பொது இடத்தில் மிகவும் மோசமான துன்புறுத்துதலுக்கு ஆளாகியிருக்கிறார். அந்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி இருந்தது.

நமீதா

சென்னை, பெங்களூர் என சில இடங்களில் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions