போலீஸ் அதிகாரியாகும் நயன்தாரா..!

Bookmark and Share

போலீஸ் அதிகாரியாகும் நயன்தாரா..!

பள்ளி மாணவி, கல்லூரி பேராசிரியை, அழகான காதலி, அன்பான குடும்பத்தலைவி என கிட்டத்தட்ட சினிமாவின் கடினமான கதாபாத்திரங்கள் அனைத்திலும் நடித்துவிட்ட நயன்தாராவுக்கு, போலீஸ் கேரக்டரில் நடிக்கவில்லை என்கிற மனக்குறை இருந்தது. இப்போது அந்த குறையும் தீரவுள்ளது.

விளம்பர பட இயக்குனரும், தொலைக்காட்சியில் தொடர் இயக்குபவருமான பிரதாப் நாயர் என்பவர் இயக்கும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நயன்தாரா.

படத்தின் கதைப்படி கேரள மாநிலம் கொச்சியில் அசிஸ்டன்ட் கமிஷனர் ஸ்டெல்லா ஜார்ஜாக பொறுப்பேற்கிறாராம் நயன்தாரா. ஆனால் அங்கே வந்தபின் தான் சீரியல் கில்லர் ஒருவன் தொடர் கொலைகளில் ஈடுபட்டுள்ளதை அறிந்து 

அதிர்ச்சியடைகிறாராம்.பின் அனைத்து சம்பவங்களும் இதை மையமாக வைத்தே நகருமாம். பாஸ்கர் தி ராஸ்கல் வெற்றிப்படத்துக்கு பின் இப்போது மலையாளத்திலேயே இன்னொரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக வெளியான தகவல் கேரளாவில் இப்போதைய பரபரப்பு செய்தி.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions