இயக்குனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய நயன்தாரா!

Bookmark and Share

இயக்குனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய நயன்தாரா!

2015ல் நயன்தாரா நடித்த அனைத்துப் படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் என்பதால் கடந்த வருடத்தின் முடிசூடா நாயகியாக வலம் வருகிறார் நயன்தாரா.

இதைத் தொடர்ந்து 2016ல் அவரின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக தயாராகிவருகின்றன. மலையாளத்தில் மம்முட்டியுடன் நடிக்கும் “புதிய நியமம்” படத்தின் வேலைகள் முழுமையாக முடிந்து வெளியீட்டிற்கு தயாராகிவிட்டது.

படத்தைப் பார்த்த நயன்தாரா படத்தில் தன்னுடைய டப்பிங் சரியாக இல்லையென்பதால், சொந்தக் குரலில் பேச இயக்குநர் எ.கே.சஞ்சனிடம் விருப்பம் தெரிவித்தாராம். அதன் படி வேலைகளும் நடந்துவருவதாகச் சொல்லப்படுகிறது. 

தெலுங்கில் வெங்கடேஷுடன் ஹைதராபாத்தில் நடந்த ஷூட்டிங் முழுமையாக முடிந்துவிட்டதாம். இறுதிகட்டப் பணிகளில் இருக்கும் அந்தப் படமும் பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு இயக்குநர் மாருதி இயக்கும் இந்தப் படத்தின்  பெயர் இன்னும் உறுதியாகவில்லை என்பது கூடுதல் செய்தி. 

தற்பொழுது கார்த்தியுடன் கஸ்மோரா படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துவருகிறார். அதைத் தொடர்ந்து விக்ரமுடன் இருமுகன் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

இதற்குநடுவே விக்ரம் இயக்கும் “ஸ்ப்ரிட் ஆஃப் சென்னை” வீடியோவில் பங்கேற்றிருக்கிறார். இந்த வருடம் தமிழில் மட்டும் சிம்புவுடன் “இதுநம்மஆளு”, ஜீவாவுடன் “திருநாள்”, விக்ரமுடன் “இருமுகன்”, கார்த்தியுடன் “கஸ்மோரா” உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
நயன்தாரா படத்தில் இணையும் இரட்டை இசையமைப்பாளர்கள்!
நயன்தாராவை தொடர்ந்து இரட்டை வேடத்தில் நடிக்கும் த்ரிஷா!
சிம்புவிற்கும் நோ சொன்ன நயன்தாரா
சென்சாரில் ஹாட்ரிக் அடித்த நயன்தாரா!
சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை வாங்கி குவித்த நயன்தாரா!
நயன்தாராவை இயக்கும் விக்ரம்!
விரைவில் கார்த்தியுடன் இணையும் நயன்தாரா!
சம்மதிப்பாரா நயன்தாரா ....,?
திருமணம் பற்றி யோசிக்கவில்லை: நயன்தாரா சிறப்புப் பேட்டி!
கணவரைத் தேடி நயனின் பயணம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions