நயன்தாராவை பின்பற்றும் நிக்கி கல்ராணி: எதிர்ப்பை சந்திப்பாரா?

Bookmark and Share

நயன்தாராவை பின்பற்றும் நிக்கி கல்ராணி: எதிர்ப்பை சந்திப்பாரா?

நயன்தாரா, விஜய் சேதுபதி இணைந்துள்ள ‘நானும் ரவுடிதான்’ படம் தொடங்கியது முதல் இதுநாள் வரை அந்த படத்தை பற்றிய ஏகப்பட்ட செய்திகள் வந்துள்ளன. படம் குறித்து நல்ல செய்திகள் வெளிவந்ததோ இல்லையோ, அதைவிட அந்த படத்தை பற்றி சர்ச்சைக்குரிய செய்திகள்தான் அதிகம் வெளிவந்துள்ளது.

நயன்தாரா இப்படத்தில் நடிக்கிறார் என்று செய்தி வந்தபோது, ஒரு அதிர்ச்சியான வீடியோ ஒன்று வெளியானது. அதாவது நயன்தாரா, ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்குவதுபோன்ற வீடியோ ஒன்று வெளிவந்தது. இதைப்பார்த்த அனைவரும் நயன்தாராவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். ஆனால், அந்த காட்சி ‘நானும் ரவுடிதான்’  படத்திற்காகத்தான் எடுக்கப்பட்டது என்று படக்குழுவினர் தெரிவித்ததும், இந்த எதிர்ப்பு சற்று அடங்கியது.

இந்நிலையில், தற்போது இன்னொரு நடிகையும் இதுமாதிரி டாஸ்மாக்கில் சென்று பீர் வாங்குவதுபோன்று ஒரு வீடியோ வந்துள்ளது. ‘டார்லிங்’ படத்தின் நாயகி நிக்கி கல்ராணி நடிப்பில் தற்போது நடித்துள்ள ‘யாகவராயினும் நாகாக்க’ படத்தின் டிரைலர் இன்று வெளியானது. இந்த டிரைலரில் நிக்கி கல்ராணி ஒரு டாஸ்மாக் கடையில் பீர் வாங்குதுபோல் ஒரு காட்சி இருக்கிறது.

நானும் ரவுடிதான் படத்தின் விளம்பரத்துக்காக நயன்தாரா டாஸ்மாக்கில் சென்று பீர் வாங்குவது போன்ற காட்சியை உலாவ விட்டதுபோல், இந்த படத்தின் விளம்பரத்துக்காகக் கூட இந்த காட்சியை படக்குழுவினர் டிரைலரில் வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இருந்தாலும், நயன்தாராவுக்கு வந்த எதிர்ப்பு, நிக்கி கல்ராணிக்கு இருக்காது என்ற நம்பிக்கையிலேயே இந்த டிரைலரில் அந்த காட்சியை படக்குழுவினர் வைத்திருக்கலாம் என்றும் பேசப்படுகிறது. 


Post your comment





Related News
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
தோல்வியை கண்டு தளரமாட்டேன் - நிக்கி கல்ராணி
துணிக்கடை திறப்பு விழாவில் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கிய நிக்கிகல்ரானி.
" பக்கா " படத்திற்கு U சான்றிதழ்!
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
திருப்பதியில் திடீரென நடக்கும் பிரபு தேவா, நிக்கி கல்ராணி திருமணம் - வெளியான அதிரடி தகவல்கள்.!
ஹரஹர மஹாதேவகி படத்தில் நடித்தது ஏன்? - நிக்கி கல்ராணி பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions