பிரபுதேவா வருகை : அதிர்ச்சியில் நயன்தாரா!

Bookmark and Share

பிரபுதேவா வருகை : அதிர்ச்சியில் நயன்தாரா!

வல்லவன் படத்தில் நடித்த போது சிம்புவுடன் காதல் வயப்பட்ட நயன்தாரா, அதையடுத்து சில மாதங்களிலேயே அவரது நடவடிக்கை சரியில்லை என்று சொல்லி அவருடனான காதலுக்கே முழுக்குப் போட்டார்.

அதோடு, அவருடன் நடிப்பதையும் தவிர்த்தார். பின்னர், விஜய்யுடன் வில்லு படத்தில் நடித்த நயன்தாரா, அந்த படத்தை இயக்கிய பிரபுதேவாவுடன் இரண்டாவதாக காதல் வயப்பட்டார்.

அந்த காதல் கல்யாணத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்காரணமாக கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்துவுக்கும் மாறினார் நயன்தாரா. ஆனால், மீண்டும் அவரது காதலில் பிரச்சினை ஏற்பட்டு முறிந்து போனது.

அதையடுத்து, மீண்டும் நடிக்கத் தொடங்கிய நயன்தாரா, இப்போது பிசியான நடிகையாகி விட்டார். மேலும், இந்தியில் இருந்து படவாய்ப்புகள் வந்தபோது, பிரபுதேவா அந்த பீல்டில் இருப்பதால் இந்தியில் நடிக்க விருப்பமில்லை என்று தவிர்த்து வந்தார்.

இந்தநிலையில், தற்போது இந்தி சினிமாவை விட்டு இடம் பெயர்ந்து தமிழ், தெலுங்கிற்கு வருகிறார் பிரபுதேவா. படம் இயக்கிக்கொண்டே நடிப்பதற்கும் அவர் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

அதனால் கவலையுடன் காணப்படுகிறார் நயன்தாரா. அதேசமயம், எக்காரணம் கொண்டும் சிம்புவுடன் மீண்டும் நடித்தது போன்று பிரபுதேவா சம்பந்தப்படும் படங்களில் நான் நடிக்க மாட்டேன் என்று தன்னை சுற்றியிருப்பவர்களிடம் தனது மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார் நயன்தாரா.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions