நயன்தாராவை எதிர்த்து போராட்டம் நடத்துவதா?: பிரியா ஆனந்த் கண்டனம்

Bookmark and Share

நயன்தாராவை எதிர்த்து போராட்டம் நடத்துவதா?: பிரியா ஆனந்த் கண்டனம்

நயன்தாரா டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்குவது போன்ற வீடியோ படம் சமீபத்தில் இன்டர்நெட்டிலும் வாட்ஸ்அப்களிலும் பரவியது. இது ரசிகர்கள் மற்றும் திலையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு விமர்சனங்களும் கிளம்பின.

நயன்தாரா தற்போது ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்காக அவர் நடித்த காட்சிதான் இதுஎன்று பிறகு தெரிய வந்தது. ஆனாலும் இந்த காட்சி படத்தில் இடம் பெறக்கூடாது என்று இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி போன்றவை போராட்டத்தில் குதித்தன. நயன்தாரா பீர் வாங்கும் காட்சியில் நடிப்பது பெண்களை குடிக்க தூண்டுவது போல் உள்ளது. எனவே அந்த காட்சியை நீக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.

நயன்தாரா கழுத்தில் பீர் பாட்டில்களை மாலையாக அணிந்து இருப்பது போன்ற போஸ்டர்களும் ஒட்டினர். பேனர்களும் வைத்தார்கள். நயன்தாராவின் கொடும்பாவியையும் எரித்தனர்.

இதனால் நயன்தாரா அதிர்ச்சியாகியுள்ளார். பீர் வாங்குவது போன்ற காட்சி படத்துக்காக எடுக்கப்பட்டது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். ஆனாலும் எதிர்ப்பாளர்கள் சமாதானம் அடையவில்லை.

நயன்தாராவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுவது குறித்து பிரியாஆனந்த் கூறியதாவது:–

நயன்தாரா மதுக்கடையில் பீர் வாங்குவது சினிமாவுக்காக படமாக்கப்பட்ட காட்சி. இதற்கு எதிர்ப்புகள் கிளம்புவது துரதிர்ஷ்டவசமானது. படம் வெளியாவது வரை காத்து இருக்க வேண்டும். ரிலீசுக்கு முன்பே போராட்டங்கள் நடத்துவது ஏற்புடையவது அல்ல.

நாங்கள் நடிகைகள். சினிமாவில் பணத்துக்காக நடிக்கிறோம். ஒரு பெண் புகைப்பிடிப்பது போல் படத்தில் காட்சி இருக்கும். இதற்காக நிஜத்தில் அவர் புகைப்பிடிக்கிறார் என்று அர்த்தம் அல்ல. கதைக்கு தேவையாக இருக்கும் பட்சத்தில் அது போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டி இருக்கிறது. டைரக்டர் சொல்கிறபடி நாங்கள் நடித்து கொடுக்கிறோம். படம் வெளியாகும் போது அந்த காட்சியின் முக்கியத்துவம் தெரிய வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘‘நானும் ரவுடிதான்’’ பட டைரக்டர் விக்னேஷ்சிவன் கூறும்போது,

கதைக்கு தேவை என்பதால் அப்படியொரு காட்சியை எடுத்தேன். படம் ரிலீசாகும்போது அது தெரிய வரும். இதற்காக நயன்தாராவை குறி வைத்து தாக்குவது ஏன் என்று புரியவில்லை. டைரக்டர் சொல்கிறபடி நடிகர்கள் நடிக்கின்றனர். நயன்தாராவும் அதைதான் செய்தார்’’ என்றார்.

நயன்தாராவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்த வேண்டாம் என்று இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாட்டில் வேறு பிரச்சினைகள் உள்ளன. அவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

இது போன்ற போராட்டங்கள் தேவையற்றது என்று அவர்கள் கூறியுள்ளனர்.


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
மாமியாராக மாறிய தேவயானி
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions