நயன்தாராவுக்காக அரேபியன் பாடலை காப்பியடித்த சித்திக்..!

Bookmark and Share

நயன்தாராவுக்காக அரேபியன் பாடலை காப்பியடித்த சித்திக்..!

மம்முட்டி நடித்து சித்திக் இயக்கியுள்ள 'பாஸ்கர் தி ராஸ்கல்' படம் ஆரம்பித்த நாள் முதல் நேற்றுவரை எந்தப்பிரச்சனையும் இல்லாமல் எந்த எதிர்மறையான செய்திகளும் இல்லாமல் தான் இருந்தது.

ஆனால் திருஷ்டி என்று ஏதாவது கட்டாயம் இருக்கவேண்டும் அல்லவா..? நாளை மறுநாள் படம் வெளியாக இருக்கும் நிலையில், இன்று காலை இணையதளத்தில் அப்லோடு செய்யப்பட பாடல் ஒன்று பலத்த விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறது.

நயன்தாரா, மம்முட்டியின் குழந்தையோடு ஆடிப்பாடுவதாக இடம்பெற்றுள்ள ’ஐ லவ் யூ மம்மி’ என்கிற பாடல் தான் அது. பாடல் வரிகளிலோ, காட்சியமைப்பிலோ எல்லாம் கான்ட்ரவர்சி இல்லை.

ஆனால் இந்தப்பாடல் அப்படியே ’ஹலா அல் டர்க்’ என்கிற ஒரு அரேபியன் பாடலின் அப்பட்டமான காப்பி என்கிற விமர்சனம் எழுந்துள்ளது. இந்தப்பாடலில் பாடல் வரிகள், இசை, காட்சியமைப்பு என ஒன்றுவிடாமல் தழுவி படமாக்கப்பட்டுள்ளது அந்த அரேபியன் பாடலை பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது.. வழக்கமாக சில மியூசிக் டைரக்டர்கள் எங்கிருந்தாவது ஒரு ஆல்பத்தில் சில ட்யூன்களை சுட்டு பாடல் போட்டுத்தருவது உண்டு.

நிச்சயமாக இது இசையமைப்பாளர் தீபக் தேவ மற்றும் சித்திக் இருவரின் கூட்டு முயற்சி தழுவல் தான். சித்திக்கின் படங்களை வாங்கி பலரும் ரீமேக் செய்துகொண்டிருக்க, ஒரு பாடலுக்காக சித்திக் இப்படி செய்யலாமா என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions