நயன்தாராவுடன் கருத்து வேறுபாடு இல்லை: சிம்பு பேட்டி

Bookmark and Share

நயன்தாராவுடன் கருத்து வேறுபாடு இல்லை: சிம்பு பேட்டி

சிம்பு-நயன்தாரா இருவரும் ‘வல்லவன்’ படத்தில் முதன்முதலாக ஜோடியாக நடித்தார்கள். அதைத்தொடர்ந்து இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

பின்னர், அந்த காதல் முறிந்து போனது. சில வருட இடைவெளிக்குப்பின், இருவரும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் மீண்டும் ஜோடி சேர்ந்தார்கள். பாண்டிராஜ் டைரக்டு செய்துள்ள இந்த படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில், நிருபருக்கு சிம்பு நேற்று பேட்டி அளித்தார். அவரிடம் நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு சிம்பு அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ‘இது நம்ம ஆளு’ வெறும் காதல் படமா? அல்லது கருத்து எதுவும் சொல்லப்பட்ட படமா?

பதில்:- ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மாதிரி ஒரு காதல் படம் இது. வழக்கமான சிம்பு படமாக இருக்காது. இதில், ‘பஞ்ச்’ வசனங்கள் கிடையாது. வெறும் காதல் மற்றும் சண்டை காட்சிகளை மட்டும் கொண்ட படமாக இருக்காது. சண்டை காட்சி இல்லாமல் நான் நடித்த முதல் படம் இது. திருமணத்துக்கு முந்திய காதலை சொல்லும் படமாக இருக்கும்.

கேள்வி:- ‘வல்லவன்’ நயன்தாராவுக்கும், ‘இது நம்ம ஆளு’ நயன்தாராவுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்குமா?

பதில்:- சிம்பு, நயன்தாரா இருவருக்குமே இந்த படம் புதுசாக இருக்கும். திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்ட ஒரு இளைஞருக்கும், பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலை பேசும் படம் இது. இருவருக்கும் இடையே திருமணத்துக்கு முன்பு நடைபெறும் நிகழ்வுகளை சித்தரிக்கும் கதை. 

இந்த படத்தை பார்க்கும் எல்லா இளைஞர்களும் சிம்பு மாதிரி இருக்க வேண்டும் என்றும், எல்லா பெண்களும் நயன்தாரா மாதிரி இருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள். இப்படி ஒரு பையன் நமக்கு கணவராக வரவேண்டும் என்று பெண்கள் விரும்புவார்கள். அதுமாதிரி என் கதாபாத்திரம் அமைக்கப்பட்டு இருக்கிறது. நயன்தாரா சிறப்பாக நடித்து இருக்கிறார்.

கேள்வி:- நீங்களும், நயன்தாராவும் மீண்டும் ஜோடியாக நடிப்பீர்களா?

பதில்:- எங்கள் இருவருக்கும் பொருத்தமான நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால், மீண்டும் ஜோடியாக நடிப்போம்.

கேள்வி:- ஒரு பாடல் காட்சியில் நயன்தாரா நடிக்க மறுத்து விட்டதாக பேசப்பட்டதே?

பதில்:- படம் தாமதம் ஆனதால், அந்த பாடல் காட்சியில் அவரால் நடிக்க முடியவில்லை. தனிப்பட்ட முறையில், நயன்தாராவுடன் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது.

கேள்வி:- படம் தாமதம் ஆனதற்கு யார் காரணம்?

பதில்:- யாரும் காரணம் அல்ல. படம் நன்றாக வந்திருக்கிறது. அந்த வகையில், படக்குழுவினர் அனைவருக்கும் சந்தோஷம்.

கேள்வி:- உங்களுக்கு வீட்டில் பெண் பார்த்தார்களே...அது என்ன ஆனது?

பதில்:- ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் பார்த்தவர்கள், அந்த படத்தின் கதாபாத்திரமான கார்த்திக் மாதிரி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ‘இது நம்ம ஆளு’ படம் பார்ப்பவர்கள், ‘சிவா’ மாதிரி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். எனக்குத்தான் பிரச்சினை. நீங்கள் கேட்ட கேள்விக்கான பதிலை இறைவன் பார்த்துக் கொள்வார். நம் கையில் ஒன்றுமில்லை. நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும்.’’

இவ்வாறு சிம்பு கூறினார்.


Post your comment





Related News
AAA இயக்குனருக்கும் சிம்புவுக்கும் மோதலா? இதென்ன புதுக்கதை?
லண்டனிலும் பட்டைய கிளப்பும் இது நம்ம ஆளு!
இது நம்ம ஆளு புதிய ரிலீஸ் தேதி வெளியானது!
இது நம்ம ஆளு ரிலீஸ் எப்போது?
சென்சாரில் ‘யூ’ பெற்ற இது நம்ம ஆளு – படக்குழு உற்சாகம்!
பரபரப்பை ஏற்படுத்திய சிம்பு-நயன்தாரா
நயன்தாராவால் இது நம்ம ஆளு படத்துக்கு பிரச்சனையில்லை: பாண்டிராஜ் விளக்கம்!
நயன்தாரா-ஹன்சிகாவை உண்மையாகவே காதலித்தாராம் சிம்பு!
ஹன்சிகா காதல் முறிவால் கவலைப்படவில்லை: சிம்பு பேட்டி
மௌனம்தான் என்னுடைய கௌரவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions