நயன்தாராவின் மும்பை ஹேர்டிரஸ்ஸர் சோனாலி விபத்தில் மரணம்!

Bookmark and Share

நயன்தாராவின் மும்பை ஹேர்டிரஸ்ஸர் சோனாலி விபத்தில் மரணம்!

சினிமா நடிகர், நடிகைகளைப் பொறுத்தவரை ஒரு மேக்கப்மேனோ, ஹேர் டிரஸ்ஸரோ தங்களை அழகாக காண்பிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டால், அதன்பிறகு அவர்களை விடவே மாட்டார்கள்.

தாங்கள் பணியாற்றும் ஒவ்வொரு படங்களிலுமே அவர்கள் வேண்டும் என்று சொல்வார்கள். சில சமயங்களில் அவர்கள் வேறு படங்களில் பிசியாக இருந்தால், அவர்கள் வந்த பிறகுதான் முக்கிய காட்சிகளில் நடிப்பார்கள்.

அந்த வகையில், நயன்தாராவின் ஹேர் டிரஸ்சராக இருந்தவர் சோனாலி. இவர் மும்பையைச் சேர்ந்தவர். பல இந்தி நடிகைகளுக்கு பிரதான ஹேர் டிரஸ்ஸராக இருந்தார்.

அவரது விதவிதமான சிகை அலங்காரத்திற்காகவே அவர் கேட்ட தொகையை கொடுத்து அங்குள்ள முன்னணி நடிகைகள் அவருக்கு வேலை கொடுத்து வந்தனர். அதேபோல், நயன்தாராவும் சில படங்களில் தனக்கு அவர் வித்தியாசமான சிகை அலங்காரம் செய்ததால் அவர்பால் ஈர்க்கப்பட்டு.

தொடர்ந்து அவருக்கு தனது படங்களில் வேலை கொடுத்து வந்தார். முக்கியமாக பாடல் காட்சிகளுக்கு அவர் சிகை அலங்காரத்தையே பெரிதும் விரும்பும் நயன்தாரா, அவருக்காக காத்திருந்துகூட சில படங்களில் நடித்திருக்கிறார்.

இப்படி நயன்தாரா மட்டுமின்றி பல பிரபல நடிகைகளை கவர்ந்த ஹேர் டிரஸ்ஸரான சோனாலி, சமீபத்தில் மும்பையில் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டாராம்.

இந்த சம்பவம் நடந்து 15 நாட்களுக்கு பிறகுதான் இப்போது அவரைப்பற்றி விசாரிக்கும் தமிழ் சினிமா நபர்களிடம் சோனாலி இறந்த விட்ட செய்தியை அவரது கணவர் கூறி வருகிறார். ஆக, பல பிரபல இந்திய நடிகைகளின் அழகுக்கு அழகு சேர்த்து வந்த சோனாலியின் இழப்பு நடிகைகளுக்கு பேரிழப்பாகி இருக்கிறது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions