'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா...

Bookmark and Share

'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா...

உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் மீண்டும் இணைந்து நடித்துள்ள 'நண்பேன்டா' படம் வரும் ஏப்ரல் 2ம் தேதி வெளியாக உள்ளது. இயக்குனர் ராஜேஷிடம் உதவியாளராக இருந்த ஜெகதீஷ் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தைப் பற்றிப் பேசும் போது படத்தில் நடித்துள்ள உதயநிதி, நயன்தாரா, சந்தானம் அனைவரையும் மிகவும் மரியாதையுடனும், பெருமையாகவும் பேசுகிறார் இயக்குனர் ஜெகதீஷ்.

“ஒரு கல் ஒரு கண்ணாடி'' சமயத்துல இருந்தே எனக்கு உதயநிதி சார்கிட்ட உதவி இயக்குனரா நல்ல பெயரை வாங்கியிருக்கேன். அப்ப இருந்தே அவருக்கு என்னைப் பிடிக்கும், தனியா படம் பண்ணணும்னு வந்தீங்கன்னா எனக்கும் கதை சொல்லுங்கன்னு சொல்லியிருந்தாரு.

அப்பவே அவருக்கு இந்தப் படத்தோட கதையைச் சொன்னேன். ஆனால், 'இது கதிர்வேலன் காதல்' படம்தான் அவரோட இரண்டாவது படமா வர வேண்டியதாயிடுச்சி. இந்தப் படத்தைத்தான் அவர் இரண்டாவது படமா பண்ண நினைச்சிட்டிருந்தாரு. இந்தப் படத்துல உதயநிதி சார் டான்ஸ், நடிப்புன்னு எல்லாத்துலயும் அசத்தியிருக்காரு.

அப்புறம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் இவங்கள்லாமும் படத்துல ஒரு கலக்கு கலக்கியிருக்காங்க. இந்தப் படத்தை குடும்பத்தோட, வந்து இந்த விடுமுறையில கலகலப்பா கொண்டாட்டமா பார்த்து ரசிக்கலாம்,” என்றார்.

தன் படத்தில் நடிப்பவர்களைப் பற்றி ஜெகதீஷ் பேசுவதைக் கேட்டால் அவரே அவர்கள் ரசிகர் மன்றங்களுக்குக் கூடத் தலைவர் ஆகி விடுவார் போலிருக்கிறது. அந்த அளவிற்கு அவர்கள் மீது பாச மழை பொழிகிறார். 


Post your comment





Related News
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு
அடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions