தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நயன்தாரா மீது டி.ஆர் புகார்

Bookmark and Share

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நயன்தாரா மீது டி.ஆர் புகார்

டி.ராஜேந்தர் தயாரிப்பில் சிம்பு-நயன்தாரா ஜோடியாக நடிக்க, பாண்டிராஜ் இயக்கிய, ‘இது நம்ம ஆளு.’ படம் 2 பாடல் காட்சிகள் மட்டும் பாக்கியிருப்பதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அந்த பாடல் காட்சிகளில் நயன்தாரா நடிக்க மறுப்பதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நயன்தாரா மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் டி.ராஜேந்தர் புகார் செய்து இருக்கிறார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பது:- 

‘‘என் மகன் சிம்புவும், நயன்தாராவும் ஜோடியாக நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இதற்காக நயன்தாராவுக்கு பேசப்பட்ட சம்பளத்தில் 75 சதவீத தொகையை கொடுத்து விட்டேன்.

மீதி 25 சதவீத சம்பளம் மட்டுமே அவருக்கு பாக்கி இருக்கிறது. ‘இது நம்ம ஆளு’ படத்தில் இன்னும் 2 பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது. 

இதற்காக நயன்தாராவின் மானேஜரிடம் பேசினோம். இம்மாதம் (செப்டம்பர்) ஐந்து நாட்களும், அடுத்த மாதம் (அக்டோபர்) ஐந்து நாட்களும் தேதி ஒதுக்கி தரும்படி கேட்டுக்கொண்டோம். அதற்கு நயன்தாரா மறுக்கிறார்.

பாடல் காட்சிகளை முடித்துக் கொடுத்ததும், அவருக்கு சேர வேண்டிய சம்பள பாக்கியை கொடுத்து விடுகிறோம். 

நயன்தாரா ஒத்துழைப்பு கொடுத்து படத்தை முடித்துத்தர தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட வேண்டும். நயன்தாராவிடம், சிம்பு ‘கால்ஷீட்’ கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த படத்தைப் பொருத்தவரை சிம்பு நடிகர்தான். அவர் மீது வதந்தியை பரப்புபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்.’’ இவ்வாறு அந்த புகாரில் டி.ராஜேந்தர் கூறியிருக்கிறார். இந்த புகாரின் நகல், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.


Post your comment





Related News
ஸ்ரீரெட்டியை சற்றும் மதிக்காத நம்பர் ஒன் நடிகை!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
பழம்பெரும் இயக்குனர் சி.வி.ராஜேந்தர் காலமானார்
அவரெல்லாம் ஒரு ஆளா? தகுதியே இல்லாத மனிதர் - பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய தன்ஷிகா.!
பஞ்ச்சில் அசால்ட் செய்யும் டி.ராஜேந்தர் அவர்களின் மாஸ் பஞ்ச் வசனங்கள் இதோ
பிரபல தனியார் தொலைக்காட்சியை தாக்கி பேசிய டி.ராஜேந்தர்
சிம்பு ஹீரோயின்களை தொட்டு நடிப்பதற்கு நான் தான் காரணம்- டி.ஆர் ஓபன் டாக்
விஜய் பற்றி பேசும் போது கலாய்த்தவர்களுக்கு செம பதிலடி கொடுத்த டி.ஆர்!
எத்தனை வெற்றி கொடுத்தாலும் பணிவுடன் இருப்பவர் விஜய்சேதுபதி: டி.ராஜேந்தர்
லட்சம் கோடி இருந்தாலும் நான் பேசுறதைத்தான் பேசுவேன்: டி.ஆர்.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions