திருநாள் படத்தில் டீச்சராக நயன்தாரா

Bookmark and Share

திருநாள் படத்தில் டீச்சராக நயன்தாரா

ஈ படத்தை தொடர்ந்து ஜீவாவும், நயன்தாராவும் பல வருடங்களுக்குப் பிறகு தற்போது இணைந்து நடித்த வரும் படம் திருநாள். அம்பாசமுத்திரம் அம்பானி படத்தை இயக்கிய பி.எஸ்.ராம்நாத் இயக்கி வரும் இப்படத்தில் ஜீவா ரௌடியாக நடிக்கிறார்.  

கும்பகோணத்தை கதைக்களமாக வைத்து எடுக்கப்படும் திருநாள் படத்தில்  ப்ரீகே.ஜி. குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் டீச்சாராக நடிக்கிறார் நயன்தாரா. அஜித் நடித்த ஏகன் படத்தில் ஏற்கனவே நயன்தாரா டீச்சராக நடித்திருக்கிறார்.

அந்தப் படத்தில் படு கிளாமராக உடை அணிந்து டீச்சர்களையே இழிவுபடுத்தினார். திருநாள் படத்திலோ புடவை கட்டி ஹோம்லியாக... சுருக்கமாக சொல்வதென்றால் நல்லடீச்சராக நடிக்கிறாராம். தமிழில்முதன் முதலாக நயன்தாரா  நடித்த படம் ஐயா அந்தப் படத்தில்  முழுக்க முழுக்க ஹோம்லியான கேரக்டரில் நடித்தார்.

கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் கதாநாயகியாக நடித்த மீனாட்சி இப்படத்தில் வித்தியாசமான ஒரு கேரக்டரில் நடிக்கிறாராம். பாண்டிய நாடு படத்தில் வில்லனாக நடித்த சரத்யோகித் வில்லனாக நடிக்கிறார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions