ராமாநாயுடுக்கு நயன்தாரா, குஷ்பு, திரிஷா புகழாரம்

Bookmark and Share

ராமாநாயுடுக்கு நயன்தாரா, குஷ்பு, திரிஷா புகழாரம்

மறைந்த பட அதிபர் ராமாநாயுடு பற்றி நடிகை குஷ்பு கூறியிருப்பதாவது:–

என்னை தெலுங்கு சினிமாவுக்கு ராமாநாயுடு தான் அறிமுகம் செய்து வைத்தார். அவரது ‘கலியுக பாண்டவுலு’ தெலுங்கு படத்தில் அவரது மகன் வெங்கடேசுடன் சேர்ந்து நடித்து அறிமுகமானேன். அவர் என்னை ஒருபோதும் புதுமுகம் போல் நடத்த வில்லை. அதே போல் வெங்கடேசும் தயாரிப்பாளர் மகன் போல் நடந்து கொள்ளாமல் பழகினார். எனது பேட்டிகள் படங்கள் எப்போது வெளியானாலும் ராமாநாயுடு உடனே எனக்கு போன் செய்து அவரது கருத்துக்களை தெரிவிப்பார்.
கடந்த மாதம் அவரை சந்தித்த போது மருமகள் லட்சுமியிடம் (சுரேசின் மனைவி) என்னைப்பற்றி பெருமையாக எடுத்துக் கூறினார். அவரது மறைவு பேரிழப்பாகும்.

இவ்வாறு குஷ்பு கூறினார்.

நடிகை திரிஷா கூறியிருப்பதாவது:–

தென்னிந்திய திரை உலகம் மற்றொரு மேதையை இழந்து விட்டது. இது சினிமாவுக்கு துக்க நாள். அவரது தயாரிப்பு நிறுவனத்தில் நான் பல படங்களில் நடித்து இருக்கிறேன். என்னை மிகவும் மரியாதையாக நடத்துவார்கள். அவரை சந்தித்து பேசியது என் வாழ் நாளில் மறக்க முடியாதது. என்னிடம் சம வயதுள்ள நண்பர் போல் பேசி பழகுவார். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்.

இவ்வாறு திரிஷா கூறியுள்ளார்.

நடிகை நயன்தாரா விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘‘ராமாநாயுடு பட அதிபர்களில் முன்மாதிரியாக விளங்கினார். இந்திய திரை உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர் அவர். அவரது மறைவு திரை உலகுக்கு பேரிழப்பாகும்’’ என்று கூறியுள்ளார். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions