நயன்தாராவை பெருமைப்படுத்தும் த்ரிஷா!

Bookmark and Share

நயன்தாராவை பெருமைப்படுத்தும் த்ரிஷா!

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் - சிவாஜிக்கு பிறகு ரஜினி-கமல் அவர்களைத் தொடர்ந்து விஜய்-அஜித் அதேபால் சிம்பு-தனுசும் போட்டி நடிகர்களாக செயல்பட்டனர்.

தற்போது சிம்பு – தனுசும் போட்டியிலிருந்து விலகி நண்பர்களாக இருந்து வருகின்றனர். அவர்களைப்போலவே சில ஆண்டுகளுக்கு முன்பு வரை த்ரிஷா-நயன்தாரா இருவரும் போட்டி  நடிகைகளாக திகழ்ந்து கொண்டிருந்தனர்.

தற்போது  தொழில் போட்டியில் இருந்து விலகி நட்பு வளர்த்து வருகின்றனர். ஆர்யாதான் அவர்களை தோழிகளாக கைகோர்க்க வைத்தவர்.. தனது தம்பி சத்யா நடித்த அமரகாவியம் படத்தின் ஆடியோ விழாவுக்கு த்ரிஷா-நயன்தாரா  இருவரும் வந்து முன்வரிசையில் கலந்துகொண்டனர். அப்போது அவர்களை அருகருகில் உட்கார வைத்த ,பகையை மறந்து மனம் விட்டு பேசிக்கொள்ளும் தோழிகளாக மாற்றினார் ஆர்யா.

நயன்தாரா மாயா படத்தில் லீடு ரோலில் நடித்திருப்பதைப் போன்று நாயகி படத்தில் திரிஷா லீடு ரோலில் நடிக்கும் செய்திகள் வெளியானதை பார்த்து த்ரிஷாவுக்கு போன் போட்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் நயன்தாரா.

இச்செய்தியை தனது அபிமானிகளுக்கு தெரிவித்து நயன்தாராவை பெருமைப்படுத்தும் வகையில் பேசி வருகிறார் த்ரிஷா.முதன் முறையாக இரு வேடங்களில் தனுஷ் நடிகை வித்யாபாலன் பாலோ தேகோ என்ற பெங்காலி படத்தில் அறிமுகமாகி பின்னர் இந்தி, மலையாள படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

தனக்கு பெயர் வாங்கித்தரக்கூடிய கதைகளை தேடிப்பிடித்து அதில் சில்க்ஸ்மிதா வாழ்க்கை கதையில் உருவான த தர்ட்டி பிக்சர்ஸ் படமும் கர்ப்பிணியாக நடித்த கஹானி படமும் இந்திய அளவில் அவரை புகழ் பெறச் செய்தது. அதன்பிறகு திருமணம் செய்து கொண்டபோதும் சினிமாவில் தொடர்ந்து  நடித்துக்கொண்டுதான் வருகிறார்.

 தற்போது தமிழில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த படத்தில் தனுஷ் முதன்முறையாக இரண்டு விதமான வேடங்களில் நடிக்கிறார். இதில் அண்ணனாக நடிக்கும் தனுசுக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறாராம். இப்படத்தை தானே தயாரிக்கும் தனுஷ், இந்தியிலும் வெளியிட திட்டமிட்டுள்ளார். 


Post your comment





Related News
ஸ்ரீரெட்டியை சற்றும் மதிக்காத நம்பர் ஒன் நடிகை!
கடத்தல் கற்பழிப்பு அச்சம்... வாடகைக் கார்களுக்கு நோ சொல்லும் டாப் நடிகைகள்!
நயன்தாரா , திரிஷாவுக்கு வயதாகிவிட்டது! நடிகை ஹன்சிகா
சம்பள உயர்வில் போட்டி போடும் நயன்தாரா-த்ரிஷா!
நயன்தாரா மீது கோபத்தில் திரிஷா?
பட வாய்ப்புக்காக திருமணத்தை தள்ளிப்போடும் கதாநாயகிகள்!
விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் இறுதியில் தொடங்குகிறது!
கம்பீரமாகக் களம் இறங்கும் நாயகிகள்...!
ஓட்டு போட வராத பிரபல நடிகைகள்!
ராமாநாயுடுக்கு நயன்தாரா, குஷ்பு, திரிஷா புகழாரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions