நயன்தாரா மீது புகார் !

Bookmark and Share

நயன்தாரா மீது புகார் !

வெங்கடேஷும் நயன்தாராவும் நடித்துள்ள படம் ‘பாபு பங்காராம்’ இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் இப்படத்தின் பாடல் ஒன்று பாக்கி உள்ளது.

எனவே இந்த பாடல் காட்சியில் நடிக்கும்படி நயன்தாராவை அழைத்தனர். ஆனால் ஏற்கனவே அளித்த கால்ஷீட்டுகளை படக்குழுவினர் விரயம் செய்து விட்டதாக கூறி அதில் நடிக்க மறுத்து விட்டார்.

நயன்தாராவின் பிடிவாதத்தால் படம் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக படக்குழுவினர் குற்றம் சாட்டினர். வேறு வழியின்றி பாடல் காட்சியை படமாக்காமலேயே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படப்பிடிப்பின் போது நயன்தாராவுக்கும் வெங்கடேசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் தான் மறுத்ததாக கூறப்படுகிறது

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions