நிஜமாகவே நடிகரின் கழுத்தை நெறித்த நயன்தாரா

Bookmark and Share

நிஜமாகவே நடிகரின் கழுத்தை நெறித்த நயன்தாரா

நயன்தாரா சோலோ ஹீரோயினாக கலக்கி வருகின்றார். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த டோரா ஓரளவிற்கு நல்ல வசூலை கொடுத்துள்ளது.

ஆனால், எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என சொல்கின்றனர். இப்படத்தில் வடநாட்டு இளைஞராக பானிபூரி விற்பவராக நடித்தவர் வெற்றி.

இவர் இந்த படத்தில் நடித்தது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இதில் ‘நயன்தாராவை பலரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று கூறுகிறார்கள்.

அதற்கு தகுதியானவர் அவர் தான், ஏனெனில் அத்தனை எளிமையாக பழகினார், என் கழுத்தை நெருக்கும் காட்சியில் கூட வலித்தால் கூறுங்கள் என்றார்.

நான் உடனே, மேடம் எனக்கு இதுதான் வாழ்க்கை, என் கழுத்தை நிஜமாகவே நெறிங்க என்றேன், அவரும் தத்ரூபமாக நடிக்க, ஒரு கட்டத்தில் வலி அதிகமாகியது.ஆனால், எங்குமே வலியை காட்டவில்லை, பொறுத்துக்கொண்டே நடித்தேன்’ என கூறியுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions