நயன்தாராவுக்காக காத்திருக்கும் விஜயசேதுபதி!

Bookmark and Share

நயன்தாராவுக்காக காத்திருக்கும் விஜயசேதுபதி!

தனுஷ் தயாரிப்பில் விஜயசேதுபதி-நயன்தாரா நடித்து வரும் நானும் ரெளடிதான் படத்தின் படப்பிடிப்பு முதல் இரண்டுகட்டமாக பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

ஆனால், இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் மட்டுமே சில தினங்கள் விஜயசேதுபதியுடன் ரொமான்ஸ் செய்தபடி நடித்த நயன்தாரா, பின்னர் கால்சீட் இல்லை என்று அங்கிருந்தபடியே தெலுங்கு படத்தில் நடிக்க ஐதராபாத்துக்கு எஸ்கேப்பாகி விட்டார்.

அதையடுத்து, விஜயசேதுபதி ரெளடிகளுடன் ஆவேசமாக மோதிக்கொள்ளும் இரண்டு சண்டை காட்சிகளை படமாக்கி விட்டு சென்னை திரும்பினர். அப்போது படத்தில் மெயின் வில்லனாக நடிக்கும் ஆனந்தராஜின் காட்சிகளும் பெருவாரியாக படமாக்கினார்களாம்.

ஆக, மற்ற நடிகர் நடிகைகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாம். அடுத்தபடியாக விஜயசேதுபதி-நயன்தாரா சம்பந்தப்பட்ட நெருக்கமான காட்சிகள்தான் அதிகமாக படமாக்கப்படவேண்டியுள்ளதாம்.

ஆனால், நயன்தாரா தெலுங்கு படத்தில் நடிக்க சென்று விட்டதால், இப்போது விஜயசேதுபதியும் வேறு படத்தில் நடிக்க முடியாமல் அவரது வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது விஜயசேதுபதிக்காக பல படங்கள் கியூவில் நிற்கின்றன. இருப்பினும், விஜயசேதுபதிக்கு நயன்தாராவுடன் டூயட் பாட வேண்டும் என்ற ஆசை. தனுசுக்கு அவர் மர்க்கெட்டில் இருக்கும் நடிகை படத்தின் வியாபாரத்துக்கு உதவக்கூடியவர் என்கிற இரண்டு காரணங்களால் இப்போது நயன்தாராவுக்காக காத்துக்கொண்டிருக்கிறது நானும் ரெளடிதான் டீம்.


Post your comment





Related News
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions