நயன்தாராவுக்காக கால்சீட்டை வாரிவழங்கிய விஜயசேதுபதி!

Bookmark and Share

நயன்தாராவுக்காக கால்சீட்டை வாரிவழங்கிய விஜயசேதுபதி!

விஜயசேதுபதியின் கனவு கன்னிகளில் நயன்தாரா குறிப்பிடத்தக்கவர். எப்படி நயன்தாராவுடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று தனி ஒருவன் படத்தில் அதை ஜெயம்ரவி நிறைவேற்றிக் கொண்டாரோ, அதேபோல் இப்போது விஜயசேதுபதியும் நானும் ரவுடிதான் படத்தில் நிறைவேற்றியுள்ளார்.

அதோடு, நயன்தாரா எப்போது கால்சீட் தருகிறாரோ அப்போது நானும் தருகிறேன் என்று சொல்லி அவர்கள் கேட்ட தேதியை கொடுத்ததோடு, வழக்கத்தை விட அதிக நாட்கள் ஒதுக்கிக்கொடுத்து நயன்தாராவுடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார்.

அவர் காட்டும் ஈடுபாட்டைப்பார்த்து அப்படத்தை ரசித்து ரசித்து எடுத்துக்கொண்டிருக்கிறார் விக்னேஷ்சிவன். ஆனால், இப்படி நானும் ரவுடிதான் படத்தில் விஜயசேதுபதி முழு ஈடுபாடு காட்டி வருவதால், தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் சில படங்களின் கால்சீட்டில் துண்டு விழுந்து விட்டதாம்.

அவர்களுக்கு கொடுத்திருந்த கால்சீட்டையும் இவர் நானும் ரவுடிதான் படத்துக்கு கொடுத்து விட்டதால் அவர்களெல்லாம் இவர் அடுத்தபடியாக எப்போது கால்சீட் தருவார் என்று காத்திருக்கின்றனர்.

ஆக, இதுவரை கால்சீட் கொடுத்தபடி நடித்து வந்த விஜயசேதுபதி, முதன்முறையாக நயன்தாரா விசயத்தில் கொஞ்சம் ஓவர் கரிசனம் காட்டியதால் சில தயாரிப்பாளர்களின் அதிருப்திக்கு ஆளாகியிருப்பதாக கூறுகிறார்கள்.


Post your comment





Related News
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions