விஜயசேதுபதியை திக்குமுக்காட வைக்கும் நயன்தாரா!

Bookmark and Share

விஜயசேதுபதியை திக்குமுக்காட வைக்கும் நயன்தாரா!

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்தபோது நயன்தாராவுடன் டூயட் பாட வேண்டும் என்ற எனது கனவு நனவாகி விட்டது என்று சொல்லி பூரித்தார் ஆர்யா. அவரைத் தொடர்ந்து ஜெயம்ரவியும் நயன்தாராவுடன் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு நனவாகாமலேயே உள்ளது என்று தனது ஆசையை வெளிப்படுத்தி வந்தார்.

ஆனால் அதை நிறைவேற்ற எந்த இயக்குனர்களும் முன்வரவில்லை. அதனால் தனது அண்ணன் ஜெயம் ராஜா தனி ஒருவன் படத்தை இயக்க தயாரானபோது, நயன்தாராதான் இந்த படத்தில் நாயகியாக நடிக்க வேண்டும் என்று கண்டிசனாக சொல்லி அவரை புக் பண்ண வைத்தார் ஜெயம்ரவி.

இப்போது ஜெயம்ரவியின் நயன்தாரா கனவும் நனவாகி விட்டது. அவர்களைத் தொடர்ந்து விஜயசேதுபதிக்கும் நயன்தாராவுடன் நடிக்க வேண்டும் என்ற கனவு மனதளவில் இருந்தது. அதை தற்போது நானும் ரெளடிதான் படத்தின் மூலம் நிறைவேற்றி வைத்திருக்கிறார் அந்த படத்தை தயாரிக்கும் தனுஷ்.

அதனால் அதிக உற்சாகத்துடன் அப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜயசேதுபதி. அந்தவகையில், முதல்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்த நிலையில், அடுத்தகட்டமாக வேறு சில லொகேசன்களை தேடினர்.

ஆனால் எதிர்பார்த்தபடி இல்லாததால் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை மீண்டும் பாண்டிச்சேரியிலேயே நடத்தப்போகிறார்களாம். அதோடு, முதல்கட்ட படப்பிடிப்பில் வில்லன் ஆனந்த ராஜின் அடியாட்களுடன் விஜயசேதுபதி மோதிக்கொள்வது போன்ற ஆக்சன் காட்சிகளையே அதிகமாக படமாக்கியவர்கள், இப்போது விஜயசேதுபதி-நயன்தாராவின் ரொமான்ஸ் காட்சிகளை கூடுதலாக படமாக்குகிறார்களாம்.

அதுவும் சில காட்சிகளில் கிளுகிளு காஸ்டியூம்களில் தோன்றப்போகிறாராம் நயன்தாரா. ஆக, ரொமான்ஸ் காட்சிகளில் அதிகமாக நடித்து அனுபவப்படாத விஜயசேதுபதி, நயன்தாராவை நெருங்கும்போது அவரது திக்குமுக்காட வைக்கும் கவர்ச்சியில் மிரளப்போவது உறுதி என்கிறார்கள் அப்படக்குழுவினர்.


Post your comment





Related News
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions