கௌதம் மேனன் இயக்கத்தில், நயன்தாரா - விக்ரம் நடிக்கும் படம்!

Bookmark and Share

கௌதம் மேனன் இயக்கத்தில், நயன்தாரா - விக்ரம் நடிக்கும் படம்!

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், விஜய்மில்டன் இயக்கத்தில், விக்ரம் நடித்து வரும் 10 எண்றதுக்குள்ளே படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. நேபாளில் சில காட்சிகள் எடுக்கப்பட வேண்டி இருப்பதால் இந்த மாதம் செல்கின்றனர்.

அதோடு 10 எண்றதுக்குள்ளே படப்பிடிப்பு ஓவர். இப்படத்தை அடுத்து விக்ரம் இரண்டு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அவற்றில் ஒரு படம்... கௌதம் மேனன் இயக்கும் படம். இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதம் தொடங்க திட்டமிட்டிருக்கிறார் கௌதம் மேனன். இப்படத்தில் பாதிக்கும் மேற்பட்ட காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்பட உள்ளது.

எனவே படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்திவிட்டு, அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டிருக்கிறார் கௌதம்மேனன். அப்ப சிம்புவை வைத்து இயக்கி வந்த அச்சம் என்பது மடமையடா படம்? சிம்புவுக்கே வெளிச்சம்


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions