நடிகர் சங்கத்தின் அடையாளத்தை மீட்டுள்ளோம்..! சங்க வளாகத்தை பார்வையிட்ட பின் நாசர் பேட்டி

Bookmark and Share

நடிகர் சங்கத்தின் அடையாளத்தை மீட்டுள்ளோம்..! சங்க வளாகத்தை பார்வையிட்ட பின் நாசர் பேட்டி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த அணியை சேர்ந்தவர்கள் இன்று பதவியேற்க உள்ளனர்.

அதற்கு முன்னதாக, இன்று மதியம் 3.30 மணியளவில் சென்னை தி.நகரில் அமைந்துள்ள நடிகர் சங்க வளாகத்தை நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினர் திரண்டு வந்து பார்வையிட்டனர். 

பின்னர், பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் சங்க தலைவர் நாசர் பேசும்போது, காணாமல் போன நடிகர் சங்கத்தின் முகவரியை தற்போது மீட்டுள்ளோம். இங்கிருந்து எங்களது பணி தொடங்கவுள்ளது. இந்த வளாகத்தை மீண்டும் புதுப்பித்து சிறப்பாக்குவோம். இந்த தேர்தலில் எங்களுக்கு வெற்றி என்பதைவிட பொறுப்பு என்ற சுமையை ஏந்தி உள்ளோம்.

நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னதையெல்லாம் கண்டிப்பாக செய்வோம். உறுப்பினர்களின் விவரங்களை சேகரிக்க உள்ளோம். அதற்கு முன்னதாக புதிய கலைஞர்களை கண்டறிந்து அவர்களின் தேவையை நிறைவேற்றுவோம். தேர்தலில் இரு அணியினர் போட்டியிட்டதை பிளவு என்று கூறமுடியாது.

எங்களுக்குள் எந்த பிளவும் கிடையாது. நடிகர் சங்க பெயரை மாற்றுவது குறித்து உடனடியாக முடிவெடுக்க முடியாது. சட்டரீதியான பிரச்சினைகளையெல்லாம் ஆராய்ந்து பிறகு இதுகுறித்து முடிவெடுக்கப்படும், என்றார். 


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
நடிகை போலீசில் புகார் - சின்னத்திரை உதவி இயக்குநர் தீக்குளித்து தற்கொலை
இனி சினிமாவில் மட்டும் தான் நடிப்பேன் - கியாரா அத்வானி
மாமியாராக மாறிய தேவயானி
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions