நடுரோட்டில் காரை நிறுத்தி ட்ராபிக்கை ஸ்தம்பிக்க வைத்த நஸ்ரியா..!

Bookmark and Share

நடுரோட்டில் காரை நிறுத்தி ட்ராபிக்கை ஸ்தம்பிக்க வைத்த நஸ்ரியா..!

நஸ்ரியா நன்றாக கார் ஓட்டுவார் தான்.. அதனால் தான் அவரது காதல் கணவர் பஹத் பாசில் அவருக்கு ஆசை ஆசையாக ரேஞ்ச் ரோவர் காரை வாங்கி பரிசளித்தார்.. காரை சும்மாவே நிறுத்தி வைத்திருந்தால் எப்படி என நினைத்த நஸ்ரியா தனது உறவினர்களை பார்த்து வருவதற்காக சில நாட்களுக்கு முன்னர் தானே காரை ஓட்டிக்கொண்டு சென்றுள்ளார்.

திரும்பி வரும்போது கொச்சினுக்கு நாற்பது கி.மீ தூரத்தில் உள்ள மூவாட்டுப்புழா என்கிற ஊருக்குள் வந்தபோது ட்ராபிக்கில் மெதுவாக சென்றார். அப்போது அவரது காரின் மீது மற்றொரு வாகனம் சற்றே உராய்ந்தவாறு செல்ல, நஸ்ரியாவுக்கு உயிரே போனதுபோல ஆகிவிட்டதாம். நடுரோட்டில் காரை அப்படியே நிறுத்திவிட்டு இறங்கிய நஸ்ரியா காரை பார்த்தபோது அதில் ஓரிடத்தில் வாகனம் உரசியதால் பெயின்ட் உதிர்ந்திருந்ததாம்.

உடனே கோபமாக நஸ்ரியா வாக்குவாதத்தில் ஈடுபட, அவரை பார்க்கும் ஆவலில் அங்கே கடும் நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்தே ஸ்தம்பித்ததாம்.  ஒரு வழியாக அங்கிருந்த போலீஸ்காரர்கள் நஸ்ரியாவை சமாதானம் செய்து அனுப்பி வைத்தபின் தான் நிலைமை சீரானதாம்.

சில மாதங்களுக்கு முன்னாள் சென்னையில் நடிகை குஷ்புவின் கார் மீது அரசு பேருந்து லேசாக உரசியபோதும் கூட, குஷ்புவினால் இதேபோன்றதொரு போக்குவரத்து நெரிசலும் களேபரமும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா
நடிகை நஸ்ரியா பற்றி வைரலாக பரவிய செய்தி- உண்மையா?
நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்தால், நான் நிறுத்திவிடுவேன்!
என் குழந்தை என்னைப்போல் இருக்கக்கூடாது: நஸ்ரியா
கணவருடன் பிறந்தநாள் கொண்டாடிய நஸ்ரியா!
மீண்டும் நடிப்பில் நஸ்ரியா!
அன்வர் ரஷீத் படத்தில் நஸ்ரியா இல்லையாம்
நஸ்ரியாவுக்கு பச்சை கொடி!
கேரள அரசின் சினிமா விருதுகள் அறிவிப்பு: நஸ்ரியாவுக்கு சிறந்த நடிகை விருது
புதிய பென்ஸ் கார் வாங்கினார் நஸ்ரியா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions