விபத்தான காரை விட்டு புதிய கார் வாங்கிய நஸ்ரியா

Bookmark and Share

விபத்தான காரை விட்டு புதிய கார் வாங்கிய நஸ்ரியா

தமிழில் ‘வாயை மூடி பேசவும்’, ‘நய்யாண்டி’, ‘ராஜா ராணி’ ஆகிய படங்களில் நடித்த நஸ்ரியா நசீமுக்கும், மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, முழு நேர குடும்பத் தலைவியாக மாறியுள்ளார். பஹத் பாசில் மலையாளத்தில் சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, நஸ்ரியா திருவனந்தபுரத்தில் தனது சொகுசுக் காரில் பயணம் செய்துகொண்டிருந்த போது, இவரது கார் மற்றொரு கார் மீது மோதியது. இந்த விபத்தில் நஸ்ரியாவின் காரில் சிறு சேதம் ஏற்பட்டது. இதையடுத்து, ரோட்டில் இறங்கி, தனது காருக்கு சேதப்படுத்திய நபர் மீது நஸ்ரியா வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்று செய்திகள் வெளிவந்தது. 

இந்நிலையில், நஸ்ரியா தற்போது புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். மெர்சிடஸ் பென்ஸ் என்ற புதிய ரக சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காரின் மதிப்பு ரூ.30 லட்சத்துக்கும் அதிகமானது.

நஸ்ரியா விபத்துக்குள்ளான காரை விற்றுவிட்டுத்தான் இந்த புதிய காரை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. நஸ்ரியா விபத்தில் சிக்கிய ரேஞ்ச் ரோவர் கார் சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலானது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா
நடிகை நஸ்ரியா பற்றி வைரலாக பரவிய செய்தி- உண்மையா?
நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்தால், நான் நிறுத்திவிடுவேன்!
என் குழந்தை என்னைப்போல் இருக்கக்கூடாது: நஸ்ரியா
கணவருடன் பிறந்தநாள் கொண்டாடிய நஸ்ரியா!
மீண்டும் நடிப்பில் நஸ்ரியா!
அன்வர் ரஷீத் படத்தில் நஸ்ரியா இல்லையாம்
நஸ்ரியாவுக்கு பச்சை கொடி!
கேரள அரசின் சினிமா விருதுகள் அறிவிப்பு: நஸ்ரியாவுக்கு சிறந்த நடிகை விருது
புதிய பென்ஸ் கார் வாங்கினார் நஸ்ரியா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions