கேரள அரசின் சினிமா விருதுகள் அறிவிப்பு: நஸ்ரியாவுக்கு சிறந்த நடிகை விருது

Bookmark and Share

கேரள அரசின் சினிமா விருதுகள் அறிவிப்பு: நஸ்ரியாவுக்கு சிறந்த நடிகை விருது

கடந்த ஆண்டுக்கான கேரள அரசின் 45-வது சினிமா விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. பழம்பெரும் கதாசிரியர் ஜான் பால் தலைமையில் 9 பேர் கொண்ட நடுவர் குழு, 38 சினிமா விருதுகளுக்கு கலைஞர்களை தேர்வு செய்துள்ளது. அதை கேரள சினிமா மந்திரி திருவாங்கூர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார். 

அதன்படி, சிறந்த நடிகர் விருதை ‘பெங்களூர் டேஸ்’, ‘1983’ ஆகிய படங்களில் நடித்ததற்காக நிவின் பாலியும், ‘மை லைப் பார்ட்னர்’ படத்தில் நடித்ததற்காக சுதேவ் நாயரும் பகிர்ந்துகொள்கின்றனர். நிவின் பாலி, தமிழில் ‘நேரம்’ என்ற படத்தில் நடித்தவர் ஆவார். ‘பெங்களூர் டேஸ்’, ‘ஓம் சாந்தி ஓஷானா’ ஆகிய படங்களுக்காக நஸ்ரியா, சிறந்த நடிகை விருதை பெறுகிறார். 

இவர், தமிழில் ‘ராஜாராணி’, ‘நேரம்’, ‘நய்யாண்டி’, ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ போன்ற படங்களில் நடித்தவர். தேசிய விருது பெற்ற ‘ஒட்டாள்’ படம், சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

‘ஓராள்போக்கம்’ படத்தை இயக்கிய சணல்குமார் சசிதரன், சிறந்த இயக்குனர் விருதை பெறுகிறார். ‘ஒய்ட் பாய்ஸ்’ படப் பாடலுக்காக சிறந்த பாடகர் விருதை ஜேசுதாசும், ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்துக்காக சிறந்த பாடகி விருதை ஷ்ரேயா கோஷலும் பெறுகிறார்கள். ‘ஒய்ட் பாய்ஸ்’ படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ரமேஷ் நாராயணன் பெறுகிறார். 

சிறந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கும், சிறந்த இயக்குனருக்கும் தலா ரூ.2 லட்சம், பாராட்டு பத்திரம், பட்டயம் ஆகியவை வழங்கப்படும். சிறந்த நடிகர், நடிகை விருது பெறுவோருக்கு தலா ரூ.50 ஆயிரம் ரொக்கம், பாராட்டு பத்திரம், பட்டயம் ஆகியவை வழங்கப்படும். 

சிறந்த நடிகை விருது பெறும் நஸ்ரியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இவ்விருது தனக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும், மக்கள் இன்னும் தன்னை நினைவில் வைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த விருது, தனது நடிப்பை மேலும் மெருகூட்ட ஊக்கமளிக்கும் என்றும், தனக்கு கூடுதல் பொறுப்புணர்வை அளிக்கும் என்றும் நிவின் பாலி கூறினார்.


Post your comment





Related News
தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா
நடிகை நஸ்ரியா பற்றி வைரலாக பரவிய செய்தி- உண்மையா?
நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்தால், நான் நிறுத்திவிடுவேன்!
என் குழந்தை என்னைப்போல் இருக்கக்கூடாது: நஸ்ரியா
கணவருடன் பிறந்தநாள் கொண்டாடிய நஸ்ரியா!
மீண்டும் நடிப்பில் நஸ்ரியா!
அன்வர் ரஷீத் படத்தில் நஸ்ரியா இல்லையாம்
நஸ்ரியாவுக்கு பச்சை கொடி!
புதிய பென்ஸ் கார் வாங்கினார் நஸ்ரியா..!
விபத்தான காரை விட்டு புதிய கார் வாங்கிய நஸ்ரியா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions