அன்வர் ரஷீத் படத்தில் நஸ்ரியா இல்லையாம்

Bookmark and Share

அன்வர் ரஷீத் படத்தில் நஸ்ரியா இல்லையாம்

நஸ்ரியா சமீபத்தில் சிறந்த நடிகைக்கான கேரள அரசு விருதுபெற்றதால் ஊக்கம் பெற்று, மீண்டும் நடிக்க வரப்போவதாக தகவல்கள் வெளியாகின. அவரது கணவர் பஹத் பாசிலும் தனது மனைவி நடிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்றும், அவர் நடிப்பதை வரவேற்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

ஏதேச்சையாகவோ அல்லது அதிர்ஷ்ட வசமாகவோ கணவன் மனைவி இருவருமே ஒரே படத்தில் சேர்ந்து நடிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின. அந்தப்படத்தை ஸ்டார் இயக்குனர் அன்வர் ரஷீத் இயக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் இயக்குனர் அன்வர் ரஷீத்தோ, பஹத் பாசிலை வைத்து தான் அடுத்த படத்தை இயக்கப்போவது உண்மைதான் என்றும், ஆனால் அதில் கதாநாயகியாக நடிப்பவர் இப்போது வரை தேர்வு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தப்படத்தில் நஸ்ரியா நடிக்க வாய்ப்பு இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். எனில் பஹத் பாசில்- நஸ்ரியா இணைந்து நடிப்பார்கள் என்பதும், நஸ்ரியா திரும்ப நடிக்க வருகிறார் என்பதும் வெறும் கனவுதான் என நஸ்ரியா ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள். 


Post your comment





Related News
தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா
நடிகை நஸ்ரியா பற்றி வைரலாக பரவிய செய்தி- உண்மையா?
நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்தால், நான் நிறுத்திவிடுவேன்!
என் குழந்தை என்னைப்போல் இருக்கக்கூடாது: நஸ்ரியா
கணவருடன் பிறந்தநாள் கொண்டாடிய நஸ்ரியா!
மீண்டும் நடிப்பில் நஸ்ரியா!
நஸ்ரியாவுக்கு பச்சை கொடி!
கேரள அரசின் சினிமா விருதுகள் அறிவிப்பு: நஸ்ரியாவுக்கு சிறந்த நடிகை விருது
புதிய பென்ஸ் கார் வாங்கினார் நஸ்ரியா..!
விபத்தான காரை விட்டு புதிய கார் வாங்கிய நஸ்ரியா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions