சுரேஷ்கோபிக்கு வில்லனாக மாறிய நெடுமுடி வேணு..!

Bookmark and Share

சுரேஷ்கோபிக்கு வில்லனாக மாறிய நெடுமுடி வேணு..!

இந்தியன், அந்நியன், பொய்சொல்ல போறோம் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்றாகவே பரிச்சயமானவர் தான் மலையாள குணச்சித்திர நடிகர் நெடுமுடி வேணு.. தேசிய விருதுபெற்ற நடிகரான இவர் மலையாளத்தில் வெளியாகும் பத்துக்கு மூன்று படங்களில் கட்டாயம் இருப்பார்.

அதுமட்டுமல்ல, கதையின் போக்கையும் கடைசிவரை தாங்கிப்பிடிக்கும் விதமாகவே இவரது கேரக்டர்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும். கடந்த வருட இறுதியில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான 'ஆமையும் முயலும்' என்கிற படத்தில் பெயரளவுக்குத்தான் ஜெயசூர்யா கதாநாயகனாக நடித்திருந்தாரே தவிர, அந்தப்படத்தின் கதையின் நாயகன் நெடுமுடி வேணுதான்.  

அப்படிப்பட்டவரை இப்போது வில்லன் கதாபாத்திரத்தில் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.. அதுவும் யாருக்கு வில்லனாக.. ஆக்சன் கிங் சுரேஷ்கோபிக்கு வில்லனாக. ஆம் சிபு கங்காதரன் இயக்கி வரும் 'ருத்ர சிம்ஹாசனம்' படத்தில் நீண்ட நாட்கள் கழித்து வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நெடுமுடி வேணு. இதற்கு முன் 'கோஸ்ட் ஹவுஸ் இன்', 'லவ் இன் சிங்கப்பூர்' உட்பட சில படங்களில் காமெடி கலந்த வில்லத்தனம் காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
மறதி நோயால் அவதிப்படும் அரவிந்த்சாமி
கன்னடத்தில் “முடிஞ்சா இவன புடி” 22 கோடி வசூல்!
150 தியேட்டர்களில் ரிலீஸான உனக்கென்ன வேணும் சொல்லு
கத்தியில்லை ...சுத்தியில்லை ...சத்தமும் கொலை செய்யும்..! இது \'நெடுமன் \' பட ரகசியம்
ஆஹாவும் இல்லை வேஸ்ட்டும் இல்லை!
நெடுஞ்சாலை ஷிவதா நடிக்கும் அருவி
கத்தி ரிலீசாகுமா? நெடுமாறன், வைகோ, சீமான், திருமாவைச் சந்திக்கும் ஏ ஆர் முருகதாஸ்!!
யார் இந்த நெடுஞ்சாலை நாயகன் ஆரி: கஷ்டத்தின் பின்னணி..!
\'நெடுஞ்சாலை\'காக தூக்கத்தை தொலைத்தேன்: உதயநிதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions