குற்றமற்றவள் என்று நிரூபித்து உயிரை விட தயார்: நடிகை நீத்து அகர்வால் கண்ணீர் பேட்டி

Bookmark and Share

குற்றமற்றவள் என்று நிரூபித்து உயிரை விட தயார்: நடிகை நீத்து அகர்வால் கண்ணீர் பேட்டி

ஆந்திராவில் செம்மர கடத்தல் வழக்கில் தெலுங்கு பட தயாரிப்பாளர் மஸ்தான்வலி, அவரது காதலியும் நடிகையுமான நீத்து அகர்வால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைதான நடிகை நீத்து அகர்வால் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில் நடிகை நீத்து அகர்வால் தெலுங்கு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பரபரப்பான பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

ராஜஸ்தானை சேர்ந்த நான் ஐதராபாத் வந்து தங்கியிருந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தேன். இந்த நிலையில் மஸ்தான்வலி பிரமா பிரயாணம் (காதல் பயணம்) என்ற பெயரில் தெலுங்கு படம் தயாரித்தார். அந்த படத்துக்கு பல நடிகைகளை ஸ்கீரீன் டெஸ்ட் எடுத்தார். அதில் யாரும் பொருந்தவில்லை. இறுதியில் எனக்கு ஸ்கீரீன் டெஸ்ட் எடுத்த போது எனக்கு பொருந்தியது. இதனால் அவரது படத்தில் நான் கதாநாயகியாக நடித்தேன்.

படப்பிடிப்பின் போது அவர் என்னை அன்பாக கவனித்துக் கொண்டார். அதனால் அவர் மீது எனக்கு காதல் ஏற்பட்டது. மஸ்தான்வலியும் நானும் நெருங்கி பழகினோம். இந்த காதல் எங்கள் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. அவர்கள் என்னிடம் நமது குடும்பத்துக்கு காதல் சரிப்பட்டு வராது. எனவே மஸ்தான்வலியுடன் பழகுவதை நிறுத்திக்கொள் என்றனர். மஸ்தான் வலியை என்னால் மறக்க முடியவில்லை. இதையடுத்து நானும் மஸ்தான்வலியும் திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் நடத்தினோம். எங்கள் திருமணத்துக்கு பெற்றோர் யாரும் வரவில்லை.

மஸ்தான் வலியை திருமணம் செய்தவுடன் என்னிடம் என் பெற்றோர் நீ சரியான கணவனை தேர்வு செய்யவில்லை. உனது வாழ்க்கை நாசமாகி விடும் என்றனர். அதன்படியே எனது வாழ்க்கை நாசமாகி விட்டது.

மஸ்தான் வலி பட தயாரிப்பாளர், ரியல் எஸ்டேட் அதிபர் என்ற முறையில் தான் எனக்கு தெரியும். அவருடன் நான் குடும்பம் நடத்திய போது கூட அவர் செம்மர கடத்தலில் ஈடுபட்டவர் என்பது எனக்கு தெரியவில்லை.

மஸ்தான்வலி எனக்கு பணம் ஏதும் தரவில்லை. நான் படங்களில் நடித்து உழைத்த பணத்தில் தான் ஐதராபாத்தில் வீடு வாங்கினேன். திருமணத்துக்கு பிறகு மஸ்தான் வலி என்னை அடிக்கடி அடித்து சித்ரவதை செய்தார்.

நான் அவருடைய மனைவி என்ற வகையில் செம்மர கடத்தலில் சிக்கிய அவர் என்னை காப்பாற்றி இருக்கலாம். ஆனால் அவர்தான் என்னை இந்த வழக்கில் சிக்க வைத்து விட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் தான் போலீசார் என்னை கைது செய்தனர். ஆனால் எனக்கும் செம்மர கடத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் இப்போது உயிருடன் இருப்பதே என்னை குற்றமற்றவள் என்று நிரூபிக்கத்தான் இல்லாவிட்டால் இந்த பிரச்சினை தொடர்பாக என்றோ நான் என் உயிரை விட்டிருப்பேன். நான் உயிரை விட்டிருந்தால் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்க முடியாது. எல்லோருமே எனக்கு எதிராக உள்ளனர். மீடியா மட்டும்தான் எனக்கு ஆதரவாக உள்ளது.
வெளி உலகினர் என்னை கொள்ளைக்காரி போல பார்க்கிறார்கள். நான் தாங்க முடியாத அவமானங்களை சந்தித்து விட்டேன். மஸ்தான்வலி நீ உண்மையை சொன்னால்தான் என்னால் இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க முடியும். மஸ்தான்வலியின் ஆட்கள் என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அடிக்கடி மிரட்டவும் செய்கிறார்கள். எனக்கு சாவதை பற்றி பயமில்லை. ஆனால் நான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்குள் என்னை கொலை செய்து விடாதீர்கள் நான் குற்றமற்றவள் என்பதை நிரூபித்த பிறகு என்னை கொலை செய்தாலும் எனக்கு கவலை இல்லை.

மஸ்தான்வலி ஜெயிலில் இருப்பதால் என்னால் அவரிடம் பேச முடியவில்லை. மஸ்தான் வலிக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது ஆட்களுக்கும் ஒரு கோரிக்கை வைக்கிறேன். நீங்கள் மனது வைத்தால் தான் என்னை காப்பாற்ற முடியும். நான் குற்றமற்றவள், நிரபராதி என்பதை நீங்கள் கூறுங்கள். அதன் மூலம் நான் குற்றமற்றவள் என்பதை நிரூபிப்பேன். அதன் பிறகு என்னை கொலை செய்தாலும் முழுமனதுடன் ஏற்றுக் கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது பல இடங்களில் நடிகை நீத்து அகர்வால் கண்ணீர் விட்டு கதறி அழுதார். 


Post your comment

Related News
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!
அட திருடா திருடா பட நடிகையா இது?- இப்போது எங்கே எப்படி இருக்காரு பாருங்களேன்- புகைப்படம் உள்ளே
காஜலா இது? ஏன் இப்படி ஆகிட்டாங்க? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!\
பிஸியாக இருக்கும் காஜல், கஷ்டப்படும் குடும்பத்தார் - என்னாச்சு தெரியுமா?
இந்த நடிகைகளுக்கு சம்பளம் இவ்வளவா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
காஜல் புகைப்படத்துடன் ரேஷன் கார்டு! அரசு கொடுத்த விளக்கம்
சினிமாவுக்கு டாட்டா சொல்லும் காஜல்? - ஏன் தெரியுமா?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions