நான் கடவுள் ராஜேந்திரனைக்கண்டு பயந்த புதுமுக நடிகை!

Bookmark and Share

நான் கடவுள் ராஜேந்திரனைக்கண்டு பயந்த புதுமுக நடிகை!

அட்டகத்தி தினேஷ் நடித்த திருடன் போலீஸ் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் நான் கடவுள் ராஜேந்திரன். ஆனால் வில்லன் வேடம் என்றாலும் காமெடியும் கலந்து நடித்தார். அது பெரிய அளவில் பேசப்பட்டது.

அதனால் தொடர்ந்து அவருக்கு காமெடி வேடங்களாக கிடைத்து வருகிறது. அப்படி அவர் தற்போது காமெடியனாக நடித்துள்ள படங்களில் இவனுக்கு தண்ணில கண்டம் படம் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த படத்தில் மார்க் என்ற வேடத்தில் மிலிட்டரிமேன் போன்று கெட்டப்பில் கையில் துப்பாக்கியை ஏந்தியபடி ஒரு ரோலில் நடித்திருக்கிறார் அவர். அந்த வகையில், இந்த படத்தில் நாயகியாக நடிக்கும் மலையாள நடிகை நேகா, அந்த கெட்டப்பில் ஸ்பாட்டில் ராஜேந்திரனைப்பார்த்ததும் ரொம்ப பயந்து விட்டாராம்.

இவருடன் இணைந்து எப்படி நடிக்கப்போகிறோம் என்று பயந்து போய் இருந்தாராம். ஆனால், பின்னர் இவரிடம் வந்து பேசிய நான் கடவுள் ராஜேந்திரனின் பேச்சு ஒரு குழந்தையைப்போல் இருந்ததாம்.

அதையடுத்து இவருக்காகவா இப்படி பயந்தோம் என்று தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டாராம் நேகா. அதோடு, பின்னர் ஸ்பாட்டில் மற்ற நடிகர்களுடன் பேசுவதை நிறுத்திவிட்டு, ராஜேந்திரன் அருகில் உட்கார்ந்து கொண்டுதான் ஜாலியாக கடலை போட்டாராம் நடிகை.


Post your comment





Related News
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
இம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “
கடுமையான உடற்பயிற்சி செய்யும் சினேகா - வைரலாகும் வீடியோ!
நடிகர் அசோக்கிற்கு திருமணம், பெண் யாரு தெரியுமா? புகைப்படம் இதோ!
சினேகனை பார்த்து அப்படி ஒரு கேள்வியை கேட்ட ஆர்த்தி
சிநேகாவிடம் மனிப்பு கேட்ட வேலைக்காரன் பட இயக்குனர் - ஏன்? என்ன நடந்தது தெரியுமா?
அமலாபாலுடன் சினேகா நடிக்கிறாரா ?
பிக் பாஸ் கவிஞர் சினேகனுக்கு திருமணம் - எப்போ தெரியுமா?
ஓவியாவுக்காக இதெல்லாம் செய்தேன், வெளிவராத உண்மைகளை போட்டுடைத்த சினேகன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions