கபாலியின் தெலுங்கு பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Bookmark and Share

கபாலியின் தெலுங்கு பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பெரிதும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ‘கபாலி’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழில் வெளிவந்த இப்பாடல்களுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்கு பதிப்பிற்கான பாடல்களை விரைவில் வெளியிடவுள்ளனர்.

அதன்படி, ‘கபாலி’ படத்தின் தெலுங்கு பாடல்களை வருகிற ஜுன் 26-ந் தேதி வெளியிடவுள்ளனர். இப்படத்தின் ஆடியோ உரிமையை பிரபல திங்க் மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘கபாலி’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலாய் உள்ளிட்ட பல மொழிகளில் வெளிவரவிருக்கிறது. 

இப்படத்தின் டீசர்கள் வெளியாகி பல சரித்திர சாதனைகளை படைத்து வரும் நிலையில், இப்படத்தை சென்சார் போர்டுக்கு அனுப்பும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். சென்சார் முடிந்தபிறகு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிப்பார்கள் என தெரிகிறது.

‘கபாலி’ படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். தினேஷ், கலையரசன், நாசர், கிஷோர், தன்ஷிகா, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions