இசையமைப்பாளர் 'சாம் டி ராஜ்'யுடன் இணையும் நெட்பிலிக்ஸ்!

Bookmark and Share

இசையமைப்பாளர் 'சாம் டி ராஜ்'யுடன் இணையும் நெட்பிலிக்ஸ்!

'வந்தா மல' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாம் டி ராஜ். தற்போது  VZ.துரை இயக்கத்தில் உருவாகும் இன்னும்  பெயரிடப்படாத படத்திற்கும்  மேலும் 2 படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். 

பட தயாரிப்பிலும் ஆன்லைன் வீடியோ சேவையிலும் அமெரிக்காவை சேர்ந்த 'நெட்பிலிக்ஸ்' எனும் நிறுவனம் பிரபலம் என்பது நாம் அறிந்ததே. அந்த நிறுவனம் சமீபத்தில் இசையமைப்பாளர்  'சாம்  டி ராஜ்'  அவர்களை, சென்னை  சாலிகிராமத்தில் உள்ள அவரின் ஸ்டுடியோவில் சந்தித்து இருவரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்துள்ளனர். 

இதுவரை இந்தியாவில் தனது கிளையை துவக்காத 'நெட்பிலிக்ஸ்' நிறுவனம் அடுத்த மாதம் மும்பையில் திறக்க திட்டமிட்டுள்ளது. ஆன்லைன் வீடியோ சேவையில் பிரபலபமான இந்த நிறுவனம் ஏற்கனவே  ஷாருக்கான் அவர்களின் 'ரெட் சில்லிஸ் என்டர்டைன்மென்ட்'  மற்றும் 'ரிலையன்ஸ் ஜியோ'யுடன் இணைந்து செயல்படயுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் படங்களையும் டிவி நிகழ்ச்சிகளையும்  ஆன்லைன் மூலம் வழங்குவதில்  இந்த நிறுவனமே  முதல் இடத்தில உள்ளது.  தற்போது அமெரிக்காவில் பிரபலமாகியுள்ள இந்த ட்ரெண்ட் 2018-க்குள் இந்திய தயாரிப்பு நிறுவங்களும் டிவி நிறுவனங்களும் பின்பற்றும். 


Post your comment





Related News
முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்?
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி
தமிழில் வெளியாகும் ராம் சரணின் ஆக்‌ஷன் படம்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions