நிகிஷா பட்டேலுக்கு இன்னொரு சான்ஸ் - ஹீரோ தாராளம்

Bookmark and Share

நிகிஷா பட்டேலுக்கு இன்னொரு சான்ஸ் - ஹீரோ தாராளம்

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் டோலிவுட் ஹீரோ பவன் கல்யாண் ஜோடியாக ‘புலி‘ தெலுங்கு படத்தில் நடித்தவர் நிகிஷா பட்டேல். இப்படம் ஹிட்டாக அமையாததால் நிகிஷா பட்டேலுக்கு பட வாய்ப்புகள் வரவில்லை.

மனம் நொந்து கிடந்தவருக்கு தமிழில்  ‘தலைவன்‘ படத்தில் புதுமுக நடிகர் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது. அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை, இதையடுத்து கவுதம் கார்த்திக் நடித்த ‘என்னமோ ஏதோ‘ படத்தில் 2வது நாயகியாக நடித்தார். நகுல் ஜோடியாக ‘நாரதன்‘ படத்தில் நடித்து வருகிறார்.

அப்படம் இன்னும் முடிவடையவில்லை. இவருக்கு பின்பு நடிக்க வந்த ஹீரோயின்கள் டாப் கியர் போட்டு முன்னேறிக்கொண்டிருப்பதால் தனது நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் சோகத்தில் இருக்கிறார்.

மீண்டும் அவருக்கு ஒரு வாய்ப்பு தரும் விதமாக தான் நடிக்கும் புதிய படத்தில் அட்டகாசமான குத்து பாடல் ஒன்றில் ஆட்டம்போட வாய்ப்பு கொடுத்திருக்கிறார் பவன் கல்யாண். இந்த வாய்ப்பு தனக்கு பெரிய அளவில் லிப்ட் தரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் நிகிஷா.


Post your comment





Related News
போட்டோ வெளியிட்டு ரசிகர்களிடம் கலாய் வாங்கிய விஜய் பட நடிகை
ஆக்‌ஷன் ரோலில் அதிரவைக்கும் நிகிஷா!
கவர்ச்சி பிகினியில் பிரபல நடிகை, இதெல்லாம் கேவலம் இல்லையாம் - புகைப்படம் உள்ளே.!
சக்தி வாசுவுக்கு ஜோடியான பிரிட்டிஷ் இந்திய அழகி
அழகு, இளமை, அதிரடி, கிளாமர் என அனைத்திலும் கலக்கும் நிகிஷா பட்டேல்
சிறந்த துணை நடிகருக்கான வாய்ப்பை இழந்தார் என்ஆர்ஐ நடிகர் தேவ் படேல்
ஆஸ்கர் ரேஸில் 'சிங்கம்': அட நெசமாத்தான்யா...
"அதுக்கு" எதுக்கு திருமணம்... எடக்குமடக்கா பேசும் இளம் நடிகை
ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கு திருமண பந்தம் தேவை இல்லை: நிகிஷா பட்டேல்
தனுஷுடன் நடிக்க ஆசைப்படும் நிகிஷா பட்டேல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions