நாரதனுக்காக ஒரே நாளில் 10 கிலோ மீட்டர் ஓடிய நிகிஷா படேல்

Bookmark and Share

நாரதனுக்காக ஒரே நாளில் 10 கிலோ மீட்டர் ஓடிய நிகிஷா படேல்

நகுல், நிகிஷா படேல், ஸ்ருதி ராமகிருஷ்ணன், பிரேம்ஜி நடிக்கும் படம் நாரதன். நாகா வெங்கடேஷ் இயக்குகிறார். சஞ்சய் லோகநாத் ஒளிபதிவு செய்கிறார், மணிசர்மா இசை அமைக்கிறார்.

இந்த படத்துக்காக சென்னை நகருக்குள் 10 நாட்கள் ரன்னிங் சேசிங் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் நாகா வெங்கடேஷ் கூறியதாவது: பொள்ளாச்சியை சேர்ந்த நகுல் ஒரு இண்டர்வியூவிற்காக சென்னை வருகிறார்.

சென்னையில் அவரது தாய்மாமன் ராதாரவி நல்ல வசதியோடு இருக்கிறார். அவர் வீட்டில் தங்கியிருந்து இண்டர்வியூ அட்டர்ன் செய்யும் திட்டத்தோடு வருகிறார்.

வரும்போது உடன் பயணிக்கும் நிகிஷா படேலை சந்தித்து அவருடன் காதல் கொள்கிறார். சென்னை வந்ததும் நிகிஷா ஒரு ஆபத்தில் சிக்கிக் கொண்ட தகவல் கிடைக்க அவரை காப்பாற்ற ஓடுகிறார்.

தன் மகளை நகுலுக்கு திருமணம் செய்து வைக்கும் திட்டத்துடன் இருக்கும் ராதராவி. அவரை பின் தொடர்ந்து தனது அடியாட்களை அனுப்பி வைக்கிறார். நகுலையும் நிகிஷாவையும் ஒரு பக்கம் வில்லன்கள் துரத்த, இன்னொரு பக்கம் ராதாரவியின் ஆட்கள் துரத்துகிறார்கள்.

இந்த காட்சி மயிலாப்பூர், ஆழ்வார் பேட்டை, வட சென்னை தண்டையார் பேட்டை, பாரீஸ் கார்னர் போன்ற நெருக்கடியான இடங்களில் படமாக்கப்பட்டது. பத்து நாட்களும் எல்லோரையும் ஓட விட்டு படமாக்கினோம்.

சில இடங்களில் கேண்டிட் கேமரா முறையிலும் படமாக்கினோம். ஒரு நாள் காலை முதல் மாலை வரை நகுலும், நிகிஷாவும் 10 கிலோ மீட்டர் வரை ஓடினார்கள். இந்த சேசிங் காட்சி பேசப்படுவதாக இருக்கும்" என்றார். நாகா வெங்கடேஷ்.

 


Post your comment





Related News
போட்டோ வெளியிட்டு ரசிகர்களிடம் கலாய் வாங்கிய விஜய் பட நடிகை
ஆக்‌ஷன் ரோலில் அதிரவைக்கும் நிகிஷா!
கவர்ச்சி பிகினியில் பிரபல நடிகை, இதெல்லாம் கேவலம் இல்லையாம் - புகைப்படம் உள்ளே.!
சக்தி வாசுவுக்கு ஜோடியான பிரிட்டிஷ் இந்திய அழகி
அழகு, இளமை, அதிரடி, கிளாமர் என அனைத்திலும் கலக்கும் நிகிஷா பட்டேல்
சிறந்த துணை நடிகருக்கான வாய்ப்பை இழந்தார் என்ஆர்ஐ நடிகர் தேவ் படேல்
ஆஸ்கர் ரேஸில் 'சிங்கம்': அட நெசமாத்தான்யா...
"அதுக்கு" எதுக்கு திருமணம்... எடக்குமடக்கா பேசும் இளம் நடிகை
ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கு திருமண பந்தம் தேவை இல்லை: நிகிஷா பட்டேல்
தனுஷுடன் நடிக்க ஆசைப்படும் நிகிஷா பட்டேல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions