தனுஷுடன் நடிக்க ஆசைப்படும் நிகிஷா பட்டேல்!

Bookmark and Share

தனுஷுடன் நடிக்க ஆசைப்படும் நிகிஷா பட்டேல்!

நிகிஷா பட்டேல் ‘கரையோரம்’ படத்தில் நடித்துள்ளார். இவருடன் சிம்ரன், இனியா ஆகியோர் நடித்துள்ளார்கள். ‘கரையோரம்’ படத்தில் நாயகியாக நடிக்கும் நிகிஷா பட்டேல் லண்டன் தொலைக்காட்சி தொடர்களில் கதாநாயகியாக நடித்தவர். அவர் தனது தமிழ் பட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்...

‘லண்டனில் தொலைக்காட்சி தொடர்களில் நாயகியாக நடித்தாலும், அது நமது இந்திய மண்ணில் நடிப்பதற்கு ஈடாகாது. எப்போதும் வீடு திரும்பியதும் இந்தி படங்கள் பார்ப்பேன். இந்திய படங்களில் நடிப்பது தான் எனது கனவாக இருந்தது.

நான் நடிக்கும் கரையோரம் படத்தில் சிம்ரன் கவுரவவேடத்தில் நடித்திருக்கிறார். அவர் எப்படி நடிக்கிறார் என்பதை பார்த்து, நான் நடிக்க கற்றுக்கொண்டேன். பழகுவதற்கு மிகவும் எளிமையானர்.

எனக்கு ஒரே நாளில் தெலுங்கில் பிரபல நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழில் அப்படி அல்ல. இந்த நிலையில் எனக்கு தமிழ் படங்களில் நடிக்க தொடர்ச்சியாக வாய்ப்பு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன். தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை.

நான் தனுஷ் ரசிகை. தனுஷ் படங்கள் என்றால் மிகவும் இஷ்டம். அவர் நடித்த படங்களை நேரம் போவது தெரியாமல் பார்த்துக்கொண்டே இருப்பேன். எந்த பாத்திரம் என்றாலும் அற்புதமாக நடிக்கிறார். அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன்’ என்றார்.


Post your comment





Related News
ஆக்‌ஷன் ரோலில் அதிரவைக்கும் நிகிஷா!
கவர்ச்சி பிகினியில் பிரபல நடிகை, இதெல்லாம் கேவலம் இல்லையாம் - புகைப்படம் உள்ளே.!
அழகு, இளமை, அதிரடி, கிளாமர் என அனைத்திலும் கலக்கும் நிகிஷா பட்டேல்
"அதுக்கு" எதுக்கு திருமணம்... எடக்குமடக்கா பேசும் இளம் நடிகை
ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கு திருமண பந்தம் தேவை இல்லை: நிகிஷா பட்டேல்
படப்பிடிப்பில் நடிகைகள் இனியா, நிகிஷா குடுமிபிடி சண்டை
நாரதனுக்காக ஒரே நாளில் 10 கிலோ மீட்டர் ஓடிய நிகிஷா படேல்
ஹீரோ கொடுத்த வாய்ப்பு நிகிஷா இன்ப அதிர்ச்சி
நடிகையின் ஐயிட்டம் சாங் ஆசை நிறைவேறியது
நிகிஷா பட்டேலுக்கு இன்னொரு சான்ஸ் - ஹீரோ தாராளம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions