சமூக பிரச்சனை மையமாக உள்ள படத்தில் நடிப்பது பெருமை: நிகிலா விமல்

Bookmark and Share

சமூக பிரச்சனை மையமாக உள்ள படத்தில் நடிப்பது பெருமை: நிகிலா விமல்

‘வெற்றிவேல்’, ‘கிடாரி’ படங்களில் சசிகுமாருடன் நடித்த நிகிலா விமல், தற்போது சிபிராஜ் நடிக்கும் புதிய படத்தின்  கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இயக்குனர் துரையிடம் இணை இயக்குநராகவும், விளம்பர பட இயக்குனராகவும்  பணியாற்றிய வினோத் இந்த படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். திரில்லர் பாணியில் உருவாக இருக்கும் இந்த  படத்தை பாஸ் மூவீஸ் சார்பில் விஜய் கே செல்லையா தயாரிக்கிறார். இதில் நடிப்பது குறித்து கூறிய நிகிலா....

“நான் முன்பு நடித்த படங்கள் மூலம் என்னை ஒரு கிராமத்து பெண்ணாகத் தான் ரசிகர்கள் பார்த்து இருக்கிறார்கள். ஆனால்  முதல் முறையாக நகர கலாச்சாரத்தில் வாழக்கூடிய பெண் கதாபாத்திரத்தில் என்னை அவர்கள் இந்த படத்தில் காண்பார்கள்.  ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் அனிமே‌ஷன் கலைஞர்களாக நானும், சிபிராஜும் இதில் நடித்து இருக்கின்றோம். 

சமூதாய பிரச்சினையை மையமாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் என்னுடைய பங்கும் இருக்கிறது என்பதை நினைக்கும்  பொழுது எனக்கு பெருமையாக இருக்கின்றது” என்றார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. காஷ்மீரிலும், அதனை  தொடர்ந்து பொள்ளாச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் படப்பிடிப்பு நடக்கிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions